Loading...
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 6 வாரங்களில் $60 பில்லியன் சரிவு; காரணம் என்ன?
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 6 வாரங்களில் $60 பில்லியன் சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 6 வாரங்களில் $60 பில்லியன் சரிவு; காரணம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 16, 2026
06:19 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் மிகப்பெரிய அளவிலான சரிவு பதிவாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) அன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நாட்டின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 9 உடன் முடிவடைந்த வாரத்தில் $726.03 பில்லியனாகக் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் 4 அன்று $785.71 பில்லியன் என்ற வரலாற்று உச்சத்தை எட்டிய கையிருப்பு, வெறும் ஆறு வார இடைவெளியில் சுமார் $60 பில்லியன் டாலர்கள் வரை சரிவை சந்தித்துள்ளது.

ஆர்பிஐ தலையீடு

ரூபாயின் மதிப்பை நிலைகொள்ளச் செய்ய ஆர்பிஐ தலையீடு

ஆசிய நாணயங்களில் இந்த ஆண்டில் இந்திய ரூபாய் மிகவும் மோசமான செயல்பாட்டைக் கொண்ட கரன்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க பாண்ட் பத்திரங்களின் வட்டி உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணப் பின்வாங்கல் ஆகியவற்றால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கரன்சி சந்தையில் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்கவும், ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களை திறந்தவெளிச் சந்தையில் விற்று தீவிரமாக தலையிட்டு வருகிறது.

தங்கம் கையிருப்பு

சமீபத்திய வாராந்திர சரிவுகள் மற்றும் தங்கம் கையிருப்பு

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, அக்டோபர் 9 உடன் முடிவடைந்த ஒரே வாரத்தில் மட்டும் கையிருப்பு $8.58 பில்லியன் குறைந்துள்ளது.

அதற்கு முந்தைய வாரத்தில் (அக்டோபர் 2) $12.95 பில்லியன் அளவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சி பதிவாகியிருந்தது.

இதில் அந்நியச் செலாவணி சொத்துக்கள் (FCA) மற்றும் தங்கம் கையிருப்பின் மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளன.

செப்டம்பர் மாதத்தில் புலம்பெயர் இந்தியர்களுக்கான சிறப்பு வைப்புத்தொகை திட்டங்கள் மூலம் $133 பில்லியன் வரை திரட்டப்பட்ட போதிலும், டாலர் விற்பனை காரணமாகக் கையிருப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

ADVERTISEMENT

பொருளாதார தாக்கம்

பொருளாதார தாக்கம் மற்றும் எதிர்கால நடவடிக்கை

அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்த போதிலும், இந்தியாவின் தற்போதைய $726 பில்லியன் கையிருப்பு என்பது நாட்டின் 10 மாதங்களுக்கும் மேலான இறக்குமதி செலவுகளுக்குப் போதுமானதாக உள்ளது எனப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கரன்சி ஊகங்களைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேலும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

சர்வதேச சூழல்கள் சீரடையும் வரை அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதான அழுத்தம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT