LOADING...
டிரம்ப் - மோடி டீல் சக்சஸ்; ஏப்ரல் முதல் இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அமல்
ஏப்ரல் முதல் இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அமல்

டிரம்ப் - மோடி டீல் சக்சஸ்; ஏப்ரல் முதல் இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அமல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2026
02:40 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடன் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்கள் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளன. மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தவிர நியூசிலாந்து உடனான மற்றொரு FTA செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தார். அமெரிக்காவுடன் போடப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வேளையில் இறக்குமதி வரிகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா - அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்

பிரதமர் மோடி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி இறுதி செய்த வர்த்தகக் கட்டமைப்பின்படி, இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகி, ஏப்ரல் முதல் செயல்பாட்டுக்கு வரும். இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த 25% பரஸ்பர வரியை 18% ஆகக் குறைக்க அமெரிக்கா சம்மதித்துள்ளது. முன்னதாக இது 50% வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்டிருந்த 25% அபராத வரியை அதிபர் டிரம்ப் ஏற்கனவே தனது நிர்வாக உத்தரவு மூலம் ரத்து செய்துள்ளார். இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்திய விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு தொழில்கள் (MSMEs) அமெரிக்காவின் 30 டிரில்லியன் டாலர் சந்தையை எளிதாக அணுக முடியும்.

Advertisement