ஜிஎஸ்டி மூலம் இந்திய அரசாங்கத்திற்கு ரூ.70,000 கோடி வசூல்
செய்தி முன்னோட்டம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு செஸ் வசூல் மூலம் சுமார் ரூ.70,000 கோடி கணிசமான உபரியை இந்திய அரசாங்கம் வசூலிக்க உள்ளது.
மாநிலங்கள் சார்பாக கோவிட்-19 காலத்தில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் இவ்வளவு உபரி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பான் மசாலா, சிகரெட் மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்ற 'பாவப் பொருட்களிலிருந்து' இந்த வலுவான வசூல் கிடைத்துள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் என்பது பான் மசாலா, சிகரெட் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் போன்ற 'பாவப் பொருட்களுக்கு' விதிக்கப்படும் கூடுதல் வரியாகும்.
இந்தியா
கூடுதல் தொகையை எப்படி பயன்படுத்துவது என்பது முடிவு செய்யப்படவில்லை
"வசூல் போக்கின்படி, மார்ச் 2026 காலக்கெடுவிற்கு முன்னதாகவே அனைத்து கடன்களையும் முன்கூட்டியே அரசால் செலுத்த முடியும் என்று தெரிகிறது. மேலும் அது சுமார் ரூ.65,000-70,000 கோடி மீதம் இருக்கும்" என்று ஒரு மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த கணிப்பு 2025ஆம் ஆண்டு பட்ஜெட் விளக்கக்காட்சிக்கு முந்தைய வருவாய் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
கூடுதல் தொகையை எப்படி பயன்படுத்துவது என்பதை மத்திய அரசு இன்னும் தீர்மானிக்கவில்லை.
இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான விகிதத்தை நிர்ணயம் செய்வது தொடர்பான விவாதங்கள் தொடங்கும் போது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.