LOADING...
இன்ஸ்டன்ட் பிரியாணி முதல் இண்டக்ஷன் அடுப்பு வரை; இந்தியர்களின் புதிய சமையல் கலாச்சாரம்
இத்தகைய உணவு வகைகளின் விற்பனை கடந்த மாதத்தை விட 10% முதல் 20% வரை அதிகரித்துள்ளது

இன்ஸ்டன்ட் பிரியாணி முதல் இண்டக்ஷன் அடுப்பு வரை; இந்தியர்களின் புதிய சமையல் கலாச்சாரம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 16, 2026
02:34 pm

செய்தி முன்னோட்டம்

வளைகுடா போர் காரணமாக சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயுவை சேமிப்பதற்காக இந்திய குடும்பங்கள் 'Ready-to-eat' மற்றும் 'Ready-to-cook' உணவு பொருட்களை நோக்கி வேகமாக மாறி வருகின்றன. கடந்த ஒரு வாரமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால், நீண்ட நேரம் சமைக்க வேண்டிய உணவுகளைத் தவிர்த்து, இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பிரியாணி கிட்கள், ஃப்ரோசன் உணவுகள் மற்றும் தாய் கறி பேஸ்ட்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் நாடுகின்றனர். இதன் காரணமாக, இத்தகைய உணவு வகைகளின் விற்பனை கடந்த மாதத்தை விட 10% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக 'தி எகனாமிக் டைம்ஸ்' அறிக்கை தெரிவிக்கிறது.

சந்தை நிலவரம்

ரெடி-டு-குக் பிரிவில் விற்பனை அதிகரித்துள்ளதாக அறிக்கை

Le Marche போன்ற சில்லறை விற்பனை நிறுவனங்கள், ரெடி-டு-குக் பிரிவில் 12% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. Moi Soi போன்ற பிராண்டுகளின் தாய் கறி பேஸ்ட்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது விற்பனையாகின்றன. அதேபோல், 'தாவத்' பிராண்டின் ரெடி-டு-குக் பிரியாணி கிட்களுக்கும் மவுசு அதிகரித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் இண்டக்ஷன் அடுப்புகள் மற்றும் மின்சார சமையல் உபகரணங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 'Swiggy Instamart' போன்ற தளங்கள் இவற்றுக்கான சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன.

தாக்கம்

பொருளாதார தாக்கம்

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு விநியோகத்தை விட வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தாலும், சந்தையில் சிலிண்டர் விலை சுமார் 30% வரை உயர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த தற்காலிக தட்டுப்பாடு, எதிர்காலத்தில் மக்கள் ஆரோக்கியமான மற்றும் எளிதில் சமைக்கக்கூடிய உணவுகளுக்கு நிரந்தரமாக மாறுவதற்கு ஒரு தொடக்க புள்ளியாக அமையலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisement