Loading...
'ஜிடிபி 7.8% அல்ல,வெறும் 2.6% தான்': முன்னாள் நிதிச் செயலாளர் கர்க் கிளப்பிய பரபரப்பு
இந்தியாவின் GDP 7.8% எட்டியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

'ஜிடிபி 7.8% அல்ல,வெறும் 2.6% தான்': முன்னாள் நிதிச் செயலாளர் கர்க் கிளப்பிய பரபரப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 03, 2026
09:44 am

செய்தி முன்னோட்டம்

மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8% எட்டியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் உற்பத்தித் துறை, சேவைத் துறை மற்றும் மூலதன முதலீடுகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த ஜிடிபி புள்ளிவிவரங்கள் குறித்த காரசார விவாதம் இந்தியா டுடே ஊடகத்தில் அரங்கேறியுள்ளது. அந்த விவாத மேடை நிகழ்ச்சியில், முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கர்க், அரசின் புதிய அடிப்படை ஆண்டுத் திருத்தம் காரணமாகவே இந்த வளர்ச்சி உயர்ந்து காட்சியளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றச்சாட்டு

சுபாஷ் சந்திர கர்க்கின் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டின் முதற்காலாண்டில் தற்போதைய சந்தை விலையிலான ஜிடிபி ரூ. 86 லட்சம் கோடி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது திடீரென ரூ. 80 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் மதிப்பீட்டை 6.9% எனக் குறைத்துக் காட்டியதால், நடப்பாண்டின் வளர்ச்சி தானாகவே 7.8% என உயர்ந்து நிற்கிறது என்றும், பழைய கணக்கீட்டின்படி பார்த்தால் உண்மையான வளர்ச்சி வெறும் 2.6% மட்டுமே என்றும் கர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுப்பு

கௌரவ் வல்லப்பின் மறுப்பு

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான டாக்டர் கௌரவ் வல்லப் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

புதிய முறையியலில் ஜிஎஸ்டி தரவுகள், புதிய நிறுவனங்களின் கணக்குகள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளதால் பழைய தரவுகளையும் புதிய தரவுகளையும் நேரடியாக ஒப்பிட முடியாது என அவர் விளக்கமளித்தார்.

மேலும் தனியார் நுகர்வு 7.1%, மூலதன உருவாக்கம் 11.9% உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி பொருளாதாரத்தின் வலிமையை அவர் நியாயப்படுத்தினார்.

ADVERTISEMENT

வாங்கும் சக்தி

வேலைவாய்ப்பு மற்றும் வாங்கும் சக்தி பற்றிய கவலைகள்

ஜிடிபி தரவுத் திருத்தங்களைத் தாண்டி, சாதாரண மக்களின் வாங்கும் சக்தி சுருங்கி வருவதாகக் கர்க் எச்சரித்துள்ளார்.

வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களில் காணப்படும் உயர்வு பெரும்பாலும் குடும்பப் பணிகளிலேயே உள்ளதாகவும், தரமான வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

எளிய நடுத்தர மக்களின் பாக்கெட்டுகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் உண்மையான சீர்திருத்தங்களே நாட்டிற்குத் தேவை என கர்க் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT