Loading...
ஒரே வாரத்தில் $11.47 பில்லியன் உயர்வு! இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $740.8 பில்லியனைத் தொட்டு வரலாற்று சாதனை
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $740.8 பில்லியனாக உயர்ந்து புதிய வரலாற்று சாதனை

ஒரே வாரத்தில் $11.47 பில்லியன் உயர்வு! இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $740.8 பில்லியனைத் தொட்டு வரலாற்று சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2026
06:03 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 28 உடன் முடிவடைந்த ஒரே வாரத்தில் $11.475 பில்லியன் அதிகரித்து $740.803 பில்லியன் (சுமார் $74,080 கோடி) என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்திலும் கையிருப்பு $12.422 பில்லியன் அதிகரித்து $729.328 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர் உயர்வு

தொடர் உயர்வுக்குக் காரணமான காரணிகள்

இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி 27 அன்று எட்டப்பட்ட $728.494 பில்லியனே அதிகபட்ச அளவாக இருந்தது.

அதன் பிறகு மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் மற்றும் பதற்றங்கள் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி டாலர்களை சந்தையில் விற்பனை செய்ததால் கையிருப்பு சரிவைக் கண்டது.

இருப்பினும், கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகை விலையிலான ஃபாரெக்ஸ் ஸ்வாப் திட்டத்தின் மூலம் $132 பில்லியனுக்கும் அதிகமான புதிய முதலீடுகள் இந்தியாவிற்குள் வந்ததால் கையிருப்பு மீண்டும் வேகமாகக் உயரத் தொடங்கியது.

தங்கம்

அந்நியச் செலாவணி சொத்துகள் மற்றும் தங்கம் இருப்பு

ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி சொத்துகள் (FCA) ஆகஸ்ட் 28 உடன் முடிவடைந்த வாரத்தில் $9.337 பில்லியன் அதிகரித்து $600.67 பில்லியனாக உயர்ந்துள்ளது.

டாலர் மதிப்பில் குறிப்பிடப்படும் இந்த சொத்துகளில் யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற பிற சர்வதேச நாணயங்களின் மதிப்பு ஏற்ற இறக்கங்களும் அடங்கும்.

அதேவேளையில், இந்தியாவின் தங்கம் கையிருப்பின் மதிப்பு ஒரே வாரத்தில் $2.191 பில்லியன் உயர்ந்து $116.409 பில்லியனை எட்டியுள்ளது.

ADVERTISEMENT

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் எஸ்டிஆர் நிலவரம்

சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியா வைத்துள்ள சிறப்பு வரைதல் உரிமைகளின் (SDRs) மதிப்பு $43 மில்லியன் குறைந்து $18.81 பில்லியனாக உள்ளது.

அதேபோல், ஐஎம்பியில் இந்தியாவின் இருப்பு நிலை $11 மில்லியன் குறைந்து $4.914 பில்லியனாக உள்ளது.

ஒட்டுமொத்தமாகத் தங்கம் கையிருப்பு மற்றும் அந்நியச் செலாவணி சொத்துகள் கணிசமாக உயர்ந்துள்ளதால், சர்வதேச பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் மேலும் வலுவடைந்துள்ளது.

ADVERTISEMENT