இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது; சவரன் விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், புதன்கிழமை (ஜூன் 24) தங்க விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹210 குறைந்து ₹13,350 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1680 குறைந்து ₹1,06,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹229 குறைந்து ₹14,564 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1832 குறைந்து ₹1,16,512 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையும் குறைந்துள்ளது
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹170 குறைந்து ₹11,170 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1360 குறைந்து ₹89,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலை ஒரு கிலோ ₹2,40,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.