LOADING...
வாரத்தின் முதல் நாளே ஷாக்; மீண்டும் தங்கம் வெள்ளி விலைகள் சரமாரி உயர்வு
மீண்டும் தங்கம் வெள்ளி விலைகள் சரமாரி உயர்வு

வாரத்தின் முதல் நாளே ஷாக்; மீண்டும் தங்கம் வெள்ளி விலைகள் சரமாரி உயர்வு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2026
12:19 pm

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, திங்கள்கிழமை (பிப்ரவரி 23) அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹180 அதிகரித்து ₹14,860 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,440 அதிகரித்து ₹1,18,880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹196 அதிகரித்து ₹16,211 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,568 அதிகரித்து ₹1,29,688 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹160 அதிகரித்து ₹12,720 ஆகவும், ஒரு சவரன் ₹1,280 அதிகரித்து ₹1,01,760 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹25 அதிகரித்து ₹300.00 ஆகவும், ஒரு கிலோ ₹3,00,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement