Loading...
ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்தது தங்கத்தின் விலை; இன்றைக்கு சவரன் விலை என்ன?
ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்தது தங்கத்தின் விலை

ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்தது தங்கத்தின் விலை; இன்றைக்கு சவரன் விலை என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 20, 2026
11:11 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, வாரத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹80 குறைந்து ₹13,490 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹640 குறைந்து ₹1,07,920 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹87 குறைந்து ₹14,717 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹696 குறைந்து ₹1,17,736 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 குறைந்து ₹11,085 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 அதிகரித்து ₹88,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே செவ்வாய்க்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹240.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,40,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT