அடிச்சது ஜாக்பாட்..இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை; சவரன் விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, செவ்வாய்கிழமை (மார்ச் 24) மீண்டும் குறைந்துள்ளது. செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹270 குறைந்து ₹12,865 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,160 குறைந்து ₹1,02,920 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹294 குறைந்து ₹14,035 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,352 குறைந்து ₹1,12,280 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை அதிகரித்தது
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹221 குறைந்து ₹10,526 ஆகவும், ஒரு சவரன் ₹1,768 குறைந்து ₹84,208 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே செவ்வாய்கிழமை வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹235.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,35,000 ஆகவும் விற்பனை ஆகிறது. ஈரான் -அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போருக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்து வரும் நிலையில், தங்கம் வெள்ளி விலையும் குறைவது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.