LOADING...
புதிய உச்சத்தை தொட்டது தங்க விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
புதிய உச்சத்தை தொட்டது தங்க விலை!

புதிய உச்சத்தை தொட்டது தங்க விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 20, 2026
11:13 am

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்கிழமை (ஜனவரி 20) மீண்டும் அதிகரித்துள்ளது. செவ்வாய்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹160 அதிகரித்து ₹13,610 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,280 அதிகரித்து ₹1,08,880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹175 அதிகரித்து ₹14,848 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,400 அதிகரித்து ₹1,18,784 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் கடுமையாக உயர்வு

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹125 அதிகரித்து ₹11,355 ஆகவும், ஒரு சவரன் ₹1,000 அதிகரித்து ₹90,840 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் செவ்வாய்கிழமை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹12 அதிகரித்து ₹330.00 ஆகவும், ஒரு கிலோ ₹3,30,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் மற்றும் தொழில்துறையில் வெள்ளியின் தேவை உயர்வு போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement