LOADING...
வாரத்தின் முதல் நாளே அதிகரித்த தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
வாரத்தின் முதல் நாளே அதிகரித்த தங்கத்தின் விலை

வாரத்தின் முதல் நாளே அதிகரித்த தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 22, 2025
10:00 am

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை திங்கள்கிழமை (டிசம்பர் 22) சற்று அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹80 அதிகரித்து ₹12,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹640 அதிகரித்து ₹99,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹87 அதிகரித்து ₹13,615 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹696 அதிகரித்து ₹1,08,920 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை 

வெள்ளி விலையும் உயர்வு

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹75 அதிகரித்து ₹10,420 ஆகவும், ஒரு சவரன் ₹600 அதிகரித்து ₹83,360 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹231.00 ஆகவும், ஒரு கிலோ ₹5,000 அதிகரித்து ₹2,31,000 ஆகவும் விற்பனை ஆகிறது. திருமண சீசன் மற்றும் அமெரிக்க வட்டி விகித குறைப்பு அறிவிப்பு போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் மீண்டும் விலையேற்றம் ஏற்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement