Page Loader
க்யூர்ஃபுட்ஸில் கூடுதலாக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளார் பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால்

க்யூர்ஃபுட்ஸில் கூடுதலாக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளார் பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால்

எழுதியவர் Sindhuja SM
Mar 18, 2024
01:57 pm

செய்தி முன்னோட்டம்

பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால், தனது ஃபண்ட் த்ரீ ஸ்டேட் வென்ச்சர்ஸ் மூலம் கிளவுட் கிச்சன் ஸ்டார்ட்-அப்பான க்யூர்ஃபுட்ஸில் கூடுதலாக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் க்யூர்ஃபுட்ஸில் அவர் செய்திருக்கும் மொத்த முதலீடு ரூ.500 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.3,000 கோடியாக உயர்ந்துள்ளது. நோமட் பீட்ஸா மற்றும் ஷரீப் பாய் பிரியாணி போன்ற பிரபலமான பிராண்டுகளின் ஆஃப்லைன் விரிவாக்கத்திற்கு இந்த கூடுதல் நிதி பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு பிளிப்கார்ட்டின் முன்னாள் நிர்வாகி அங்கித் நகோரி என்பவரால் நிறுவப்பட்ட க்யூர்ஃபுட்ஸ், கிளவுட் கிச்சன் துறையில் செயல்படுகிறது

பிளிப்கார்ட்

வேகமாக வளர்ந்து வரும் க்யூர்ஃபுட்ஸ் நிறுவனம் 

பெங்களூரை தளமாகக் கொண்ட இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம், ரெபெல் ஃபுட்ஸ், பிரியாணி பை கிலோ மற்றும் ஈட் கிளப் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இயங்கி வருகிறது. பிரீஸ் பாட்டில், ஈட்ஃபிட் மற்றும் கேக்சோன் போன்ற பிராண்டுகளையும் க்யூர்ஃபுட்ஸ் வைத்திருக்கிறது. முக்கிய நிறுவனங்களை கையகப்படுத்துவதன் மூலம் க்யூர்ஃபுட்ஸ் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. உணவு கண்டுபிடிப்பு தளமான Hogr மற்றும் Foodtech நிறுவனமான Yumlane உள்ளிட்ட நிறுவனங்களை 2023 இல் க்யூர்ஃபுட்ஸ் கையகப்படுத்தியது. கடந்த வருடம், அதாவது FY23 இல், இந்த ஸ்டார்ட்-அப்பின் செயல்பாட்டு வருவாய் 400% அதிகரித்து ரூ. 382 கோடியாக உயர்ந்தது