Loading...
$119.50ஐ எட்டிய கச்சா எண்ணெய் விலை, பெட்ரோல் டீசல் விலையும் உயருமா?
பெட்ரோல்

$119.50ஐ எட்டிய கச்சா எண்ணெய் விலை, பெட்ரோல் டீசல் விலையும் உயருமா?

எழுதியவர் Prasanna
Mar 09, 2026
03:46 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் இருந்து வருவதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஐந்தாண்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 119.50 டாலர்களை எட்டியுள்ளது. போர் பதற்றம் இருப்பது, கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்டிருப்பது மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் விலை மேலும் உயரலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

சர்வதேசம்

அமெரிக்கா ஈரான் போர்

சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்மூஸ் நீரிணை வழியாகவே நடக்கிறது. அமெரிக்கா இஸ்ரேல் உடனான போரைத் தொடர்ந்து இதனை ஈரான் முடக்கியிருக்கிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

சர்வதேச பிரச்சினைகளின் காரணமாக ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளன. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கவுள்ளன.

இந்த நாடுகளின் முடிவும் கச்சா எண்ணைய்யின் விலை உயர்வதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

பெட்ரோல்

பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்

எண்ணெய் வர்த்தகத்திலும் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்திருக்கிறது.

சர்வதேச அளவில் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்தும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

இந்தியாவிற்கு தேவையான கச்சா எண்ணெய்யில் 85% வெளிநாடுகளில் இருந்த இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT