Loading...
கோவையில் ₹400 கோடியில் பிரம்மாண்ட ஃபின்டெக் மையம்: 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு
கோவையில் ₹400 கோடியில் பிரம்மாண்ட ஃபின்டெக் மையம் அறிவிக்கப்பட்டுள்ளது

கோவையில் ₹400 கோடியில் பிரம்மாண்ட ஃபின்டெக் மையம்: 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 31, 2026
01:22 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், கோயம்புத்தூரில் ₹400 கோடி மதிப்பீட்டில் புதிய 'டிஜிட்டல் நிதி மையம்' அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) சார்பில் உருவாக்கப்பட உள்ள இத்திட்டம், கொங்கு மண்டலத்தின் பொருளாதார மற்றும் நிதிநுட்பச் சூழலில் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

வசதிகள்

உலகத் தரத்திலான அதிநவீன வசதிகள்

புதிய தொழில்முனைவோரின் ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தேவையான அலுவலக இடங்கள் மற்றும் சர்வதேச வசதிகள் இங்கு வழங்கப்படும்.

நிதிநுட்பக் கண்டுபிடிப்புகளுக்கான அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் பிரத்யேக திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

சர்வதேச நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும்.

முக்கியத்துவம்

ஃபின்டெக் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்

நிதி மற்றும் தொழில்நுட்பத்தின் இணைப்பே ஃபின்டெக் எனப்படுகிறது.

பாரம்பரிய வங்கிச் சேவைகள், செல்போன் பணப் பரிவர்த்தனை (UPI), உடனடி கடன்கள் மற்றும் டிஜிட்டல் காப்பீடு சேவைகளை பாதுகாப்பாகவும் காகிதமில்லாமலும் வழங்க இது உதவுகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வணிகர்கள் (MSME) எளிய முறையில் நிதி உதவியையும் வங்கிச் சேவைகளையும் பெற ஃபின்டெக் நிறுவனங்கள் பெரிதும் துணையாக இருக்கின்றன.

சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் இத்தகைய நிதி மையம் அமைவது, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT