
இணையத்தில் கசிந்த ஸியோமி எலெக்ட்ரிக் கார்! டெஸ்லாவுக்கே போட்டியா?
செய்தி முன்னோட்டம்
ஸியோமி நிறுவனம் உருவாக்கி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன் உற்பத்தில் முன்னணி நிறுவனமான ஸியோமி (Xiaomi) எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்ய இறங்கியுள்ளது.
இவர்கள் ஏற்கனவே, ஸ்மார்ட் வாட்ச், ஏர் ப்யூரிஃபையர், எல்இடி டிவி, புரஜெக்டர், வேக்யூம் க்ளீனர், ப்ளூடூத் ஸ்பீக்கர், இன்டர்நெட் ரவுட்டர், இயர்போன், செக்யூரிட்டி கேமிரா என பலவிதமான பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், இவர்களின் ஸியோமியின் எலெக்ட்ரிக் காரின் படங்கள் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது.
இன்னும் சில வாரங்களில் இந்த கார் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது.
மேலும், ஸியோமி நிறுவனம் எம்எஸ் 11 (Xiaomi MS11) எனும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணியிலேயே ஈடுபட்டு வருகின்றது.
ஸியோமி எலெக்ட்ரிக் கார்
ஸியோமி எலெக்ட்ரிக் கார் சிறப்புகள் என்ன? கசிந்த புகைப்படங்கள்
இந்த அற்புதமான கார் டிசைன் வெகுவாக பலரையும் கவர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த காரின் சிறப்பாக ஃப்ளஷ் ரக ஹேண்டில்களே அனைத்து கதவுகளிலும் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், மேற்கூரை முழுவதும் ஒற்றை பேனல் ரக கிளாஸே பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களில் காணப்படுவதைப் போன்ற அலாய் வீல்களும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
அடுத்த 10 வருடங்களில் மின் வாகன சந்தையில் பெரும் புரட்சியை செய்யும் நோக்கில் இந்த பணியில் அது களமிறங்கி இருக்கின்றது.
இவர்கள் மட்டுமின்றி, செல்போன் உற்பத்தி மற்ற நிறுவனமான லெனோவோ, ஆப்பிள், ஹூவாய், கூகுள் மற்றும் சோனி ஆகிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் மின் வாகன தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றன.