இந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடல் கார்கள்
கார் ரசிகர்களிடையே ஆஃப்-ரோடிங் எஸ்யூவி மாடல் கார்கள் மீதான ஆர்வம் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. முன்பு அதிகம் போட்டியின்றி இருந்த இந்த செக்மெண்டில் தற்போது போட்டி சற்று அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்கள் என்னென்ன? மஹிந்திரா ஸ்கார்பியோ-N: நெடுஞ்சாலைகளுக்கும், ஆஃப்-ரோடிங் பயணங்களுக்கு ஏற்ற சிறந்த மாட்ல இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ-N. சரியான ஆஃப்-ரோடிங் மாடலாக உருவாக்கப்பட்ட இந்த மாடல், இந்தியாவில் ரூ.17.69 லட்சம் முதல் ரூ.24.52 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இஸூசு டி-மேக்ஸ் வி-கிராஸ்: லைஃப்ஸ்டைல் பிக்கப்பான டி-மேக்ஸ் ஆஃப்-ரோடிங்குக்கும் ஏற்ற கார் தான். ரூ.23.50 லட்சம்-ரூ.27 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த மாடல்.
மாருதி சுஸூகி ஜிம்னி:
நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பிறகு தங்களுடைய புதிய ஆஃப்-ரோடிங் எஸ்யூவியான ஜிம்னியை இந்தியாவில் அறிமுகம் செய்தது மாருதி சூஸூகி. ரூ.12.74 லட்சம் முதல் ரூ.15.05 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது இந்த மாருதி ஜிம்னி. மஹிந்திரா தார்: நீண்ட காலமாக இந்தியாவில் ஆஃப்-ரோடிங் செக்மெண்டில் தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சி வந்த மாடல் மஹிந்திரா தார். தற்போது இதன் 3-டோர் வேரியன்டானது, ரூ.13.87 லட்சம் முதல் ரூ.16.78 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஃபோர்ஸ் கூர்க்கா: ரூ.14.75 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட தங்களுடைய கூர்க்கா மாடலின் ஒரே ஒரு வேரியன்டை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஃபோர்ஸ் மோட்டார்ஸ்.