வரும் மாதங்களில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் டாடா
அடுத்து வரும் மாதங்களில், இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் தங்களுடைய பல்வேறு கார்களின் புதிய ஃபேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது டாடா நிறுவனம். என்னென்ன மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது டாடா? 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய பன்ச் CNG மாடலை ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டாடா. அந்நிறுவனத்தின் புதிய ட்வின் சிலிண்டர் செட்டப்புடன் பன்ச் CNG-யை வெளியிடவிருக்கிறது டாடா. டாடாவின் பிரதான எஸ்யூவி மாடல்களான சஃபாரி மற்றும் ஹேரியர் மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல்களையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். வெளிப்பக்கம் சில டிசைன் மாற்றங்களையும், உள்பக்கம் சில கூடுதல் வசதிகளையும் இந்த ஃபேஸ்லிஃப்ட்களில் நாம் எதிர்பார்க்கலாம். செப்டம்பரின் புதிய மாடல்களின் தயாரிப்பைத் தொடங்க திட்டமிட்டிரு வருகிறது டாடா.
அடுத்து வெளியாகவிருக்கும் டாடாவின் புதிய அறிமுகங்கள்:
ஹேரியர் மற்றும் சஃபாரியைப் போலவே, நெக்ஸான் மாடலின் ஃபேஸ்லிஃப்டையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டாடா. கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய கர்வ் மாடலின் டிசைனை அடிப்படையாகக் கொண்ட டிசைனை நெக்ஸான் எஸ்யூவிக்கு டாடா கொடுக்கவிருப்பதாகத் தகவல். நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டை வெளியிடும் போதே நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்டையும் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. நெக்ஸான் எஸ்யூவியில் இருந்து நெக்ஸான் EV-யை தனித்துக் காட்ட, இதன் முகப்புப் பக்கத்திற்கு சற்று புதிய டிசைனைக் கொடுக்கவிருக்கிறது டாடா. நெக்ஸான் EV மற்றும் டியாகோ EV-க்கு அடுத்தபடியாக டாடாவின் EV லைன்அப்பில் இணையவிருக்கிறது பன்ச் EV. சின்னச் சின்ன டிசைன் மாற்றங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு பன்ச்சின் டிசைனை அப்படியே அதன் EV வெர்ஷனுக்கும் கொடுக்கவிருக்கிறது டாடா.