மூடுபனி காலத்தில், விபத்துகளை தவிர்க்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்
குளிர் காலத்தில், வாகனத்தை பாதுகாக்க சில குறிப்புகள் மூடுபனி காலத்தில், பொதுவாக நிறைய விபத்துகள் ஏற்படுவதுண்டு. அதை தவிர்க்க, பின்வரும் சில வழிமுறைகளை பின்பற்றவும். அடர்ந்த மூடுபனி சூழ்நிலையில் வாகனம் ஓட்டும் போது, உங்கள் வேகத்தை கண்காணிக்கவும். மெதுவாக வேகத்தை அதிகரிக்கவும், அதேபோல படிப்படியாக குறைக்கவும். எப்போதும் முந்த வேண்டாம், ஓரமாக செல்ல வேண்டாம். ஹெட் லைட்களை ஆன் செய்யவும், டெயில் லேம்ப்கள், ஃப்ளாஷர்களை ஆன் செய்யவும், இதனால், மற்றவர்கள் உங்களைப் பார்த்து, பாதுகாப்பான தூரத்தைப் பின்பற்ற முடியும். பார்வைத்திறன் 100 மீட்டருக்கும் குறைவாக இருந்தால், காரின் மூடுபனி விளக்கையும் ஆன் செய்யவும். எப்போதும் ஹை- பீம் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் மூடுபனி, ஒளியை பிரதிபலிக்கும். இது வாகன ஓட்டிகளின் பார்வைக்கு இடையூறாகும்.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு
பனிமூட்டமான நிலையில், டயர்கள் மற்றும் ஹாரன்களின் சத்தங்கள், கண்ணுக்கு தெரியாத வாகனங்களின் தூரத்தை மதிப்பிட உதவும். மூடுபனி ரோட்டில் ஓட்டும் போது, ஒரு குறிப்பிட்ட பாதையை தேர்வு செய்து, அதில் ஓட்டுவது உகந்தது. பாதை மாற கூடாது. வாகனத்தின், ஜன்னல்களையும், விண்ட்ஸகிரீன்-யும் சுத்தமாக, பார்வைக்கு இடையூறின்றி வைத்து இருப்பது மிக முக்கியம். வெளியில் இருக்கும் மூடுபனியானது, வாகனத்தின் உட்புறத்தில் உறைவு தன்மையை ஏற்படுத்தும். அது கண்ணாடி மேல் படிந்து, வாகனஓட்டிகளுக்கு சிரமத்தை தரும். எனவே ஹீட்டர் பயன்படுத்தவும். உங்களுக்கும், முன்னால் செல்லும் வாகனத்திற்கும் இடையில் போதிய இடைவெளியை வைத்திருப்பது மிகவும் முக்கியம். விபத்துகளை தவிர்க்க உதவும். மூடுபனி வழியாக வாகனம் ஓட்டும்போது மிக முக்கியமான விஷயம் விழிப்புடன் இருப்பது.