LOADING...
உலகிலேயே முதல்முறை! நிசான் கிராவிட் சிஎன்ஜி காரில் இப்படியொரு தொழில்நுட்பமா? சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்
நிசான் கிராவிட் சிஎன்ஜியில் செங்குத்தான இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பம்

உலகிலேயே முதல்முறை! நிசான் கிராவிட் சிஎன்ஜி காரில் இப்படியொரு தொழில்நுட்பமா? சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 20, 2026
11:28 am

செய்தி முன்னோட்டம்

நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம், தனது புதிய மல்டி பர்ப்பஸ் வாகனமான (MPV) கிராவிட் மாடலை உள்நாட்டுச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நடுத்தரக் குடும்பங்களைக் கவரும் வகையில், இதன் ஆரம்ப விலை ரூ. 5.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் 5,000 முன்பதிவுகளுக்கு மட்டுமே இந்த சலுகை விலை பொருந்தும். மேலும், 5 ஆண்டுகளுக்கு ஜீரோ சர்வீஸ் காஸ்ட் மற்றும் 5.55% முதல் தொடங்கும் குறைந்த வட்டி விகித நிதி வசதி போன்ற கவர்ச்சிகரமான சலுகைகளையும் நிசான் அறிவித்துள்ளது.

தொழில்நுட்பம்

தனித்துவமான சிஎன்ஜி தொழில்நுட்பம்

இந்த அறிமுக விழாவின் முக்கிய ஈர்ப்பாக கிராவிட் சிஎன்ஜி மாடல் அமைந்தது. மற்ற நிறுவனங்களின் இரட்டை சிலிண்டர் கார்களில் சிலிண்டர்கள் பக்கவாட்டில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், நிசான் கிராவிட்டில் இரண்டு சிலிண்டர்களும் ஒன்றின் மேல் ஒன்றாக செங்குத்தாக அடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காரின் பின்பக்கத்தில் அகலமான இடம் கிடைக்கிறது. சிறிய அளவிலான உடமைகளை ஏற்றிச் செல்ல இது வசதியாக இருக்கும்.

என்ஜின்

என்ஜின் மற்றும் செயல்திறன்

நிசான் கிராவிட் கார், ரெனால்ட் ட்ரைபர் காரில் உள்ள அதே 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைப் பெற்றுள்ளது. இது 71 hp ஆற்றலையும் 96 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மைலேஜைப் பொறுத்தவரை, ஏஎம்டி மாடல் லிட்டருக்கு 19.6 கிமீ மற்றும் மேனுவல் மாடல் 19.3 கிமீ வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி மாடலின் மைலேஜ் விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

சிக்கல்

இடவசதியும் நடைமுறைச் சிக்கல்களும்

செங்குத்தாக அடுக்கப்பட்ட சிலிண்டர்கள் தரைப்பகுதியை அதிகப்படுத்தினாலும், பெரிய பைகளை அடுக்கும்போது சற்று சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், சிஎன்ஜி டேங்க் இருந்தும் ஓரளவு இடவசதியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் நிசான் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சிஎன்ஜி கார் சந்தையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. மைலேஜ் மற்றும் பட்ஜெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நகரவாசிகளுக்கு இது ஒரு சிறந்த மாற்றாக அமையும்.

Advertisement