LOADING...
பைக் செயினை கவனிக்க மறந்தால் ஆபத்து; வீட்டிலேயே எளிமையாக செயின் கிளீன் செய்வது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் கைடு!
வீட்டிலேயே பைக் செய்து கிளீன் செய்து லூப்ரிகேட் செய்யும் முறை

பைக் செயினை கவனிக்க மறந்தால் ஆபத்து; வீட்டிலேயே எளிமையாக செயின் கிளீன் செய்வது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் கைடு!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 06, 2026
06:53 pm

செய்தி முன்னோட்டம்

மோட்டார் சைக்கிளின் என்ஜினில் இருந்து பின் சக்கரத்திற்கு ஆற்றலை (Power) கடத்துவது பைக் செயின் தான். எனவே, இதை முறையாகப் பராமரிக்காவிட்டால் பைக்கின் பெர்ஃபார்மன்ஸ் குறைவதோடு, செயின் மற்றும் ஸ்ப்ராக்கெட்கள் விரைவில் தேய்மானம் அடைந்துவிடும். குறைந்தது ஒவ்வொரு 500 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகும் செயினை சுத்தம் செய்வது அவசியம். இதற்கு தேவையான கருவிகள் ஒரு பழைய டூத் பிரஷ் அல்லது செயின் கிளீனிங் பிரஷ், WD-40 போன்ற கிளீனிங் ஸ்ப்ரே (அழுக்குகளை நீக்க), தரமான செயின் லூப்ரிகண்ட் (Chain Lube), ஒரு பழைய துணி (Rag).

பராமரிப்பு

செயினைப் பராமரிக்கும் முறைகள்

படி 1: சென்டர் ஸ்டாண்டில் நிறுத்துதல் - முதலில் பைக்கை சமமான தரைப்பகுதியில் சென்டர் ஸ்டாண்டில் நிறுத்தவும். சென்டர் ஸ்டாண்ட் இல்லாதவர்கள் பேடாக் ஸ்டாண்ட் பயன்படுத்தலாம். இது பின் சக்கரத்தை எளிதாகச் சுழற்ற உதவும், இதனால் செயினை கிளீன் செய்வது எளிதாகும். படி 2: செயினை கழுவுதல் - செயினில் ஒட்டியிருக்கும் மேல்புற அழுக்குகள் மற்றும் தூசிகளை நீக்க முதலில் தண்ணீரில் நன்கு கழுவவும். பிரஷர் வாஷ் செய்ய முடிந்தால் இன்னும் சிறப்பு, இது கடினமான அழுக்குகளைத் தளர்த்த உதவும்.

கிளீன்

கிளீன் செய்தல் மற்றும் ஆயில் போடுதல்

படி 3: கிளீனிங் செய்தல் - இப்போது WD-40 ஸ்ப்ரேயை செயின் முழுவதும் தெளிக்கவும். சில நிமிடங்கள் ஊறவிட்டு, பிரஷ் கொண்டு செயினின் அனைத்துப் பக்கங்களையும் நன்கு தேய்க்கவும். கருப்பு நிறத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, செயின் அதன் ஒரிஜினல் மெட்டாலிக் நிறத்திற்கு வரும் வரை துணி கொண்டு துடைக்கவும். படி 4: ஆயில் அல்லது லூப் போடுதல் - செயினை முழுமையாக உலர வைத்த பிறகு, செயின் லூப்ரிகண்ட்டை ஒவ்வொரு லிங்க்கிலும் (Chain links) படும்படி தெளிக்கவும். சக்கரத்தைச் மெதுவாகச் சுழற்றிக் கொண்டே லூப் அடிப்பதன் மூலம் சீராகப் பரவும். லூப் அடிக்கும்போது டயரில் படாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

Advertisement