புழக்கத்தில் இருக்கும் 12,000 வாகனங்களுக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தீ பிடிக்கும் அபாயம் இருப்பதால், CLS, E-Class மற்றும் AMG GT 4-டோர் மாடல்கள் உட்பட சுமார் 12,191 வாகனங்களை மெர்சிடிஸ்-பென்ஸ் அமெரிக்காவில் இருந்து திரும்பப் பெற இருக்கிறது.
மேற்குறிப்பிட்ட மாடல்களில் உள்ள 48V கிரவுண்ட் கனெக்ஷனில் தீ பிடிக்கும் அபாயம் கண்டறியப்பட்டுள்ளது.
பல வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது.
பாதிக்கப்பட்ட அந்தத் வாகனங்கள் அக்டோபர் 21, 2021 முதல் ஏப்ரல் 4, 2023 வரை தயாரிக்கப்பட்டவைகளாகும்.
48V பேட்டரி அமைப்பிற்கான தரை இணைப்பு முறையற்ற முறையில் இறுக்கப்பட்டு இருப்பதை மெர்சிடிஸ்-பென்ஸ் கண்டறிந்துள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ்
வாகனங்கள் தீ பிடித்து எரிய வாய்ப்பு
அப்படி இறுக்கப்பட்டிருப்பதால், அந்த வாகனங்களில் இருந்து தொடர்ந்து எச்சரிக்கை அலராம்கள் அடித்துள்ளன.
தொடர்ந்து எச்சரிக்கையை பெற்ற வாடிக்கையாளர்கள் இது குறித்து புகார் அளித்திருக்கின்றனர்.
கிரவுண்ட் கேபிள் பாதுகாப்பாக இணைக்கப்படாவிட்டால், அது அதிக மின் எதிர்ப்பையும் இணைப்பில் வெப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும். அதனால் வாகனங்கள் தீ பிடித்து எரிய வாய்ப்புள்ளது.
எனவே, இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்காக 12,191 வாகனங்களுக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் எச்சரிக்கை அனுப்ப உள்ளது.
2020 GLC 350e, 2019-2022 GLC 300 மற்றும் 2020-2022 AMG GLC 43 ஆகிய மாடல்கள் இதில் அடங்கும்.