Page Loader
XUV 400 மற்றும் பொலேரோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு சலுகைகளை வழங்கும் மஹிந்திரா
XUV 400 மற்றும் பொலேரோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு சலுகைகளை வழங்கும் மஹிந்திரா

XUV 400 மற்றும் பொலேரோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு சலுகைகளை வழங்கும் மஹிந்திரா

எழுதியவர் Prasanna Venkatesh
Sep 10, 2023
12:49 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு மட்டும் செப்டம்பர் மாதத்திற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது மஹிந்திரா. எக்ஸ்யூவி 400 EV, மராஸோ, எக்ஸ்யூவி 300, பொலேரோ மற்றும் பொலேரோ நியோ ஆகிய மாடல்கலுக்கு தற்போது சலுகைகளை வழங்கி வருகிறது இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா. மஹிந்திர வழங்கும் இந்த சலுகைகளை தள்ளுபடிகளாகவே அல்லது கூடுதல் உபகரணங்கள் வாயிலாகவோ வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஒரேயொரு எலெக்ட்ரிக் கார் மாடலான எக்ஸ்யூவி 400க்கு ரூ.1.25 லட்சம் தள்ளுபடியை வழங்குகிறது மஹிந்திரா. இதன் மூலம், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் டாடாவின் நெக்ஸான் EV-யை விட குறைவான விலையில் எக்ஸ்யூவி 400ஐ பெற்றுக்கொள்ள முடியும்.

மஹிந்திரா

கார்களுக்கு மஹிந்திரா வழங்கும் சலுகைகள்: 

அதிகபட்சமாக, தங்களது மராஸோ மாடலுக்கு ரூ.58,000 வரையில் தள்ளுபடியையும், ரூ.15,000 மதிப்புடைய உபகரணங்களையும் வழங்குகிறது மஹிந்திரா. அதனைத் தொடர்ந்து, பொலேரோ நியோ மாடலுக்கு, ரூ.35,000 வரையிலான தள்ளுடியையும், ரூ.15,000 மதிப்புடைய உபகரணங்களையும் வழங்கி வருகிறது மஹிந்திரா. அதேபோல், அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் மற்றொரு எஸ்யூவியான பொலேரோவுக்கு ரூ.25,000 முதல் ரூ.60,000 வரை தள்ளுபடி மற்றும் உபகரணங்களை வழங்குகிறது அந்நிறுவனம். குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் மாடல்களான தார், ஸ்கார்ப்பியோ N மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய மாடல்களுக்கு அந்நிறுவனம் எந்த சலுகையோ அல்லது தள்ளுபடியோ வழங்கவில்லை.