எலக்ட்ரிக் சூப்பர் கார்களை உற்பத்தி செய்ய புதிய தொழிற்சாலையை திறந்தது ஃபெராரி
செய்தி முன்னோட்டம்
ஃபெராரி தனது புதிய தொழிற்சாலையை இத்தாலியில் உள்ள மரனெல்லோவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த நிறுவனத்தின் முதல் முழு மின்சார சூப்பர் காரைத் தயாரிக்க இந்த தொழிற்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த தொழிற்சாலை பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி, 2025 இன் பிற்பகுதியில் ஃபெராரியின் முதல் மின்சார வாகனத்தின்(EV) உற்பத்தியைத் தொடங்க உள்ளது.
€ 200 மில்லியன்(தோராயமாக ₹1,787 கோடி) மதிப்பில் கட்டப்பட்ட இந்த தொழிற்சாலை ஹைபிரிட் மாடல்கள் மற்றும் எரிப்பு இயந்திர கார்களையும் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபெராரி
'உற்பத்தியை அதிகரிப்பது ஃபெராரியின் நோக்கமல்ல'
இந்த புதிய தொழிற்சாலையானது ஃபெராரியின் உற்பத்தி அளவை அதிகரிப்பதற்காக கட்டப்படவில்லை. மாறாக அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்காக கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழிற்சாலையை அறிமுகம் செய்த ஃபெராரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பெனடெட்டோ விக்னா, அனைத்து உற்பத்தி செயல்முறைகளையும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைப்பதன் மூலம், ஃபெராரி தனது கார்களின் தனித்துவத்தை பராமரிக்கும் அதே வேளையில் லாபத்தையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டில், ஃபெராரி 13,663 வாகனங்களை தயாரித்தது.
இது போர்ஷேயின் விற்பனையான 320,000 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாகும்.
ஃபெராரியின் புதிய தொழிற்சாலை ஆறு கால்பந்து மைதானங்களுக்கு சமமான நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே, இது ஃபெராரியின் உற்பத்தியை வெகுவாக அதிகரிக்கும்.