LOADING...
ஹெல்மெட் பாக்ஸிற்குள் மொபைலை வச்சிட்டு போறீங்களா? இவி பைக் வச்சிருக்கவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய ஆபத்து
இவி பைக் ஹெல்மெட் பாக்ஸிற்குள் மொபைலை வைப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஆபத்துகள்

ஹெல்மெட் பாக்ஸிற்குள் மொபைலை வச்சிட்டு போறீங்களா? இவி பைக் வச்சிருக்கவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய ஆபத்து

எழுதியவர் Sekar Chinnappan
Jul 03, 2026
08:14 pm

செய்தி முன்னோட்டம்

இன்றைய அவசர காலகட்டத்தில் நம்மில் பலரும் பைக் ஓட்டும் போது மொபைல் போனை கையில் வைத்திருக்காமல், சீட்டிற்கு அடியில் இருக்கும் ஹெல்மெட் பாக்ஸிற்குள் தூக்கிப் போட்டுவிட்டு செல்வதை ஒரு வழக்கமாகவே பலர் வைத்துள்ளனர். சாதாரண பெட்ரோல் பைக்குகளில் இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், நீங்கள் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்/பைக் வைத்திருப்பவர் என்றால், இந்த ஒரு சிறிய பழக்கம் உங்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். பலரும் சாதாரணமாக நினைக்கும் இந்த விஷயத்திற்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் உண்மைகளை ஆட்டோமொபைல் மற்றும் பேட்டரி தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்பொழுது எச்சரித்துள்ளனர்.

வெப்பம்

சீட்டின் அடியில் இருக்கும் வெப்ப உலை

சாதாரண பெட்ரோல் பைக்குகளில் இன்ஜின் வண்டியின் கீழ் பகுதியில் இருக்கும், சீட்டின் அடியில் வெறும் பெட்ரோல் டேங்க் அல்லது காலி இடம் மட்டுமே இருக்கும். ஆனால், எலக்ட்ரிக் பைக்குகளில் வண்டியை இயக்கும் பிரம்மாண்டமான லித்தியம்-அயன் பேட்டரி பேக் நேரடியாக உங்களது சீட்டிற்கு அடியில் அல்லது ஹெல்மெட் பாக்ஸிற்கு மிக அருகில்தான் பொருத்தப்பட்டிருக்கும். நீங்கள் வண்டியை ஓட்டும் போது இந்த மெயின் பேட்டரி தொடர்ந்து அதிகப்படியான மின்சாரத்தை வெளியிடுவதால், இயற்கையாகவே சீட்டின் அடியில் உள்ள பகுதி அதிக வெப்பமடையத் தொடங்கும்.

தெர்மல் ரன்அவே

மொபைல் பேட்டரியைத் தாக்கும் 'தெர்மல் ரன்அவே' (Thermal Runaway) ஆபத்து

இவி பைக்கின் பேட்டரி ஒருபுறம் வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருக்கும் போது, அதற்கு மிக அருகில் உங்களது ஸ்மார்ட்போனை வைக்கும் போது ஆபத்து இரட்டிப்பாகிறது. மொபைல் போன்களிலும் லித்தியம் பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. ஹெல்மெட் பாக்ஸிற்குள் காற்றோட்டம் இல்லாததால், பைக்கின் பேட்டரி வெப்பம் மொபைல் போனை மிக வேகமாகச் சூடாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் மொபைல் போனின் வெப்பநிலை உயர்ந்தால், அதிலுள்ள பேட்டரி கெமிக்கல்கள் உருகி 'தெர்மல் ரன்அவே' என்றழைக்கப்படும் கட்டுப்பாடற்ற தீ விபத்து ஏற்பட்டு, மொபைல் போன் பாக்ஸிற்குள்ளேயே வெடிக்கக் கூடும்.

Advertisement

தீப்பிடிக்க காரணம்

இவி பைக் மொத்தமாகத் தீப்பிடிக்க நம்ம வீட்டு மொபைலே காரணம்

ஒருவேளை ஹெல்மெட் பாக்ஸிற்குள் மொபைல் போன் வெடித்தால், அது வெறும் மொபைலோடு மட்டும் நின்றுவிடாது. மொபைல் வெடிக்கும் போது ஏற்படும் சிறிய தீப்பொறி அல்லது அதிகப்படியான வெப்பம், அதற்கு மிக அருகில் இருக்கும் இவி பைக்கின் மெகா பேட்டரி பேக்கிற்கு உடனடியாகப் பரவிவிடும். இவி பைக் பேட்டரிகள் ஒருமுறை தீப்பிடித்தால் அவற்றை அணைப்பது மிகவும் கடினம். நாம் செய்யும் ஒரு சிறிய அஜாக்கிரதை, ஒட்டுமொத்த எலக்ட்ரிக் பைக்கும் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரியும் மெகா விபத்தாக மாறிவிடும் எனப் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

பின்பற்ற வேண்டியவை

இவி பைக் வைத்திருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய 3 கோல்டன் ரூல்ஸ்

மொபைலை சீட்டின் அடியில் வைக்காதீங்கள்: எவ்வளவு அவசரமாக இருந்தாலும் மொபைல் போன்களை சீட்டின் அடியில் வைப்பதைத் தவிர்த்து, உங்களது பேன்ட் பாக்கெட் அல்லது தோள் பைகளில் வைத்துக் கொள்ளுங்கள். பாக்ஸிற்குள் சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்: பல இவி பைக்குகளில் ஹெல்மெட் பாக்ஸிற்குள் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டிருக்கும். வண்டி ஓடும் போது மொபைலை உள்ளே மாட்டி சார்ஜ் செய்வதை முற்றிலுமாகத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் சார்ஜ் ஆகும் போது மொபைல் இன்னும் கூடுதலாகச் சூடாகும். பொருட்களைத் திணிக்க வேண்டாம்: ஹெல்மெட் பாக்ஸிற்குள் பிளாஸ்டிக் கவர்கள், ரெயின்கோட் போன்ற காற்றோட்டத்தைத் தடுக்கும் பொருட்களைத் திணித்து வைக்கக் கூடாது. இது வண்டியின் பேட்டரி வெப்பத்தை வெளியேற விடாமல் உள்ளேயே தேக்கி வைத்துவிடும்.

Advertisement