NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனையாகி வரும் CNG கார்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனையாகி வரும் CNG கார்கள்
    ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனையாகி வரும் CNG கார்கள்

    ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனையாகி வரும் CNG கார்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 04, 2023
    12:30 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக CNG மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை தேடத் தொடங்கியிருக்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

    எலெக்ட்ரிக் வாகனங்களின் அதிக விலை மற்றும் கட்டமைப்பு குறைவாக இருப்பதன் காரணமாக, CNG-யை பெரிதும் விரும்புகின்றனர் கார் வாடிக்கையாளர்கள். இந்தியாவில் ரூ.10 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் கார்களின் பட்டியல் இங்கே.

    டாடா டியாகோ iCNG:

    விலை: ரூ.6.55 லட்சம் முதல்

    73hp பவர் மற்றும் 95Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய இன்ஜினுடன், இந்தியாவின் விலை குறைந்த CNG மாடலாக வலம் வருகிறது டாடாவின் டியாகோ iCNG.

    டூயல்-டோன் டேஷ்போர்டில் தொடங்கி ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் வரை பல மேம்பட்ட வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்தக் கார்.

    கார்

    ஹூண்டாய் கிராண்டு i10 நியாஸ்: 

    விலை: ரூ.7.68 லட்சம் முதல்

    68hp பவர் மற்றும் 95.2Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர், இன்லைன் ஃபோர் இன்ஜினைக் கொண்டிருக்கிறது இந்த கிராண்டு i10 நியாஸ்.

    8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் பேனல், சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருக்கிறது இந்த i10 நியாஸ் CNG.

    டொயோட்டா கிளான்ஸா CNG:

    விலை: ரூ.8.6 லட்சம் முதல்

    76.4hp பவர் மற்றும் 98.5Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர், இன்லைன் ஃபோர் இன்ஜினைப் பெற்றிருக்கிறது டொயோட்டா கிளாஸ்ஸா CNG.

    9.0-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் பேனல், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், டூயல்-டோன் டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த கிளான்ஸ CNG.

    CNG

    மாருதி சுஸூகி பெலினோ S-CNG: 

    விலை: ரூ.8.35 லட்சம் முதல்

    76.4hp பவர் மற்றும் 98.5Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 1.2 லிட்டர், இன்லைன் ஃபோர், k சீரிஸ் இன்ஜினைப் பெற்றிருக்கிறத இந்த பெலினோ S-CNG.

    9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, கீலெஸ் எண்ட்ரி, ஹெட்ஸ்அப் டிஸ்பிளே மற்றும் டூயல் டோன் டேஷ்போர்டு உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த பெலினோ S-CNG.

    டாடா ஆல்ட்ராஸ் iCNG:

    விலை: 7.55 லட்சம் முதல்

    77hp பவர் மற்றும் 103Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 1.2 லிட்டர் இன்ஜினைப் பெற்ற டாடாவின் மற்றுமொரு விலை குறைந்த CNG மாடல் இந்த ஆல்ட்ராஸ் iCNG.

    வாய்ஸ் ஆக்டிவேட்டட் சன்ரூஃப், ரியர்-வ்யூ கேமரா உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆல்ட்ராஸ் CNG மாடல்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    கார்

    புதிய ஃபேஸ்லிஃப்டட் ஜீப்புக்கு மாற்றாக இந்தியாவில் விற்பனையாகி வரும் கார்கள் ஃபேஸ்லிஃப்ட்
    கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம்  வங்கிக் கணக்கு
    சுமாரான விற்பனையைத் தொடர்ந்து ஹெக்டர் மாடல்களின் விலையைக் குறைத்த எம்ஜி மோட்டார் எம்ஜி மோட்டார்
    இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலையை கட்டமைக்கத் திட்டமிட்டு வரும் டொயோட்டா ஆட்டோமொபைல்

    ஆட்டோமொபைல்

    'eVX' கான்செப்ட் எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு வடிவத்தை சோதனை செய்து வரும் மாருதி? மாருதி
    இந்தியாவில் கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க பரிசீலனை செய்து வரும் மத்திய அரசு டெஸ்லா
    இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் 'டாடா கர்வ்' எஸ்யூவி, என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    இந்தியாவில் வெளியாகியிருக்கும் கவாஸாகியின் புதிய 'டர்ட் பைக்குகள்'  கவாஸாகி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025