சாட்ஜிபிடி பட்டியலிட்ட இந்தியாவின் 7 சிறந்த கார்கள்
சாட்ஜிபிடியிடம் எந்தத்துறை குறித்து கேள்வியெழுப்பினாலும், அதற்கான பதிலை ஆராய்ந்து நமக்கு வழங்கும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் வெளியிடப்பட்ட சிறந்த கார்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 7 கார்களை சிறந்த கார்கள் எனப் பட்டியலிட்டிருக்கிறது சாட்ஜிபிடி. கியா செல்டோஸ்: 2019-ல் வெளியிடப்பட்டு மிகக் குறுகிய காலத்திலேயே இந்திய கார் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்ற கார். சமீபத்தில் தான் இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் வெளியானது. டாடா நானோ: உலகிலேயே மிகவும் விலை குறைந்த காராக இந்தியாவில் அறிமுகமான நானோ, உலகளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. டொயோட்டா இன்னோவா: கிரிஸ்டா மற்றும் ஹைகிராஸ் என இரண்டு வடிவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா இன்னோவா தான், இந்திய ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்களின் ஃபேவரைட் எம்பிவி.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ:
2022-ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட இந்த காரின் முதல் தலைமுறை மாடலும் ஸ்கார்ப்பியோ கிளாஸிக் என்ற பெயரில் இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹோண்டா சிட்டி: இந்தியாவில் செடான் செக்மண்டில் வாடிக்கையாளர்களின் ஆல்-டைம் ஃபேவரைட் மாடல் என்றால் அது ஹோண்டாவின் சிட்டி தான். தற்போது இதன் 5ம்-தலைமுறை மாடல் விற்பனையில் இருக்கிறது. ஹூண்டாய் i10: ஹேட்ச்பேக் செக்மெண்டில் இரண்டாவது சிறந்த காராக அறியப்படுதிறது i10. இதன் வெற்றியைத் தொடர்ந்து கிராண்டு i10-ஐ 2009-ல் இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய். மாருதி சுஸூகி ஸ்விப்ட்: பட்ஜெட் கார் வாடிக்கையாளர்களின் ஃபேவரைட் இந்த ஸ்விப்ட். ஹேட்ச்பேக் மாடல்களுக்கான மவுசு குறைந்து வரும் தற்போதைய காலக்கட்டத்திலும் கூட தனக்கான பெயரை தக்க வைத்திருக்கிறது ஸ்விப்ட்.