பேட்டரி டெத் ஆனால் ஹைப்ரிட் காரை இன்னும் ஓட்ட முடியுமா? பலரும் அறியாத ஷாக்கிங் உண்மைகள்
செய்தி முன்னோட்டம்
பெட்ரோல் விலையேற்றத்தில் இருந்து தப்பிக்கவும், அதிக மைலேஜ் பெறவும் பலரும் இப்போது ஹைப்ரிட் கார்களை நோக்கித் திரும்புகிறார்கள். ஆனால், இந்த சொகுசான பயணத்திற்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான ஹை-வோல்டேஜ் பேட்டரி ஒருவேளை செயலிழந்தால் என்ன ஆகும்? இந்த சூழலில் உங்கள் கார் நடுத்தெருவில் நிற்குமா அல்லது பெட்ரோல் காரைப் போல ஓடுமா என்பதை இதில் விரிவாக பார்க்கலாம்.
பேட்டரி
ஹைப்ரிட் பேட்டரியின் அசாத்தியப் பங்கு
ஒரு ஹைப்ரிட் கார் என்பது பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆகிய இரண்டின் கூட்டு முயற்சி. மெதுவான வேகத்தில் செல்லும்போது சத்தமே இல்லாமல் எலக்ட்ரிக் மோட்டாரில் ஓடுவதும், வேகம் எடுக்கும்போது பெட்ரோல் என்ஜினுக்குத் தேவையான கூடுதல் சக்தியைத் தருவதும் இந்த பேட்டரி தான். இதுதான் ஹைப்ரிட் கார்களை அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக மாற்றுகிறது.
பேட்டரி டெத்
பேட்டரி செயலிழந்தால் என்ன நடக்கும்?
பேட்டரி முழுமையாகச் செயலிழக்கும்போது, அந்தப் பாரம் அப்படியே பெட்ரோல் என்ஜின் மீது விழுகிறது. எலக்ட்ரிக் மோட்டார் ஓய்வெடுக்கும் நேரத்தில் கூட என்ஜின் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் கார் அதிக சத்தத்தை உண்டாக்கும். எலக்ட்ரிக் மோட்டார் தரும் அந்த உடனடி வேகம் இருக்காது. கார் இழுத்துக்கொண்டு ஓடுவது போல ஒரு உணர்வைத் தரும்.
மைலேஜ்
மைலேஜில் விழும் பலத்த அடி
பேட்டரி இல்லாத ஹைப்ரிட் கார் என்பது ஒரு சாதாரண பெட்ரோல் காரை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படும். உங்கள் காரின் மைலேஜ் 20% முதல் 40% வரை அப்படியே குறையக்கூடும். பிரேக் பிடிக்கும்போது வீணாகும் ஆற்றலைச் சேமிக்கும் 'Regenerative Braking' வசதி வேலை செய்யாது. இதனால் ஒரு துளி பெட்ரோலைக் கூட உங்களால் சேமிக்க முடியாது.
கார் இயக்கம்
காரை இன்னும் ஓட்ட முடியுமா?
இதற்கான பதில் உங்கள் காரின் ஹைப்ரிட் சிஸ்டத்தைப் பொறுத்தது. லிம்ப் மோடு: இந்த வசதி இருக்கும் கார்களில் பெட்ரோல் என்ஜினை மட்டும் வைத்துக்கொண்டு மெதுவாக மெக்கானிக் ஷாப் வரை ஓட்டிச் செல்ல முடியும். இயக்கமே நின்றுவிடும்: ஆனால் பெரும்பாலான நவீன ஹைப்ரிட் கார்களில், மெயின் பேட்டரி செயலிழந்தால் காரை ஸ்டார்ட் செய்யவே முடியாது. பெட்ரோல் என்ஜினை ஸ்டார்ட் செய்யத் தேவையான மின்சாரத்தையும் அந்த ஹை-வோல்டேஜ் பேட்டரியே வழங்குவதால், நீங்கள் பாதியில் நிற்க வேண்டியிருக்கும். உங்கள் காரில் 12V பேட்டரி மற்றும் மெயின் ஹைப்ரிட் பேட்டரி என இரண்டு இருக்கும். 12V பேட்டரி தீர்ந்தால் ஜம்ப் ஸ்டார்ட் செய்யலாம், ஆனால் மெயின் பேட்டரி போனால் மெக்கானிக் தான் ஒரே வழி.