Loading...
சொந்தமாக கார் வாங்குவது நிஜமாவே நல்ல முடிவா? நிதி நெருக்கடியின்றி கார் வாங்க உதவும் 20/4/10 நிதி விதி
நிதி நெருக்கடியின்றி கார் வாங்க உதவும் 20/4/10 நிதி விதி

சொந்தமாக கார் வாங்குவது நிஜமாவே நல்ல முடிவா? நிதி நெருக்கடியின்றி கார் வாங்க உதவும் 20/4/10 நிதி விதி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2026
08:39 pm

செய்தி முன்னோட்டம்

இன்றைய காலகட்டத்தில் சொந்தமாக ஒரு கார் வாங்குவது என்பது பலரின் மாபெரும் கனவாக இருக்கிறது. இருப்பினும், கார் என்பது வாங்கிய அன்றே மதிப்புக் குறையும் ஒரு சொத்து என்பதால், அதை அவசரப்பட்டு வாங்குவது மாதாந்திர பட்ஜெட்டை கடுமையாகப் பாதிக்கும். எனவே, உங்கள் தற்போதைய வருமானத்திற்குச் சொந்தக் கார் வாங்குவது நிதி ரீதியாக சரியான முடிவா என்பதை உறுதி செய்ய நிதியியல் நிபுணர்கள் 20/4/10 என்ற எளிய விதியைப் பரிந்துரைக்கின்றனர்.

விதி

20/4/10 விதியில் 20 மற்றும் 4 குறிப்பது என்ன?

20/4/10 விதியின் முதல் விதியான 20 என்பது, காரின் மொத்த ஆன்-ரோட் விலையில் குறைந்தபட்சம் 20 சதவீதத் தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

அடுத்ததாக உள்ள 4 என்பது, எஞ்சிய தொகைகாக நீங்கள் வாங்கும் வாகனக் கடனின் தவணைக் காலம் அதிகபட்சமாக 4 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது.

கடன் காலத்தைக் குறைவாக வைப்பது நீங்கள் செலுத்தும் வட்டித் தொகையைக் கணிசமாகக் குறைக்கும்.

பராமரிப்புச் செலவு

விதியில் 10 குறிக்கும் மாதாந்திர பராமரிப்புச் செலவு விகிதம்

இந்த விதியின் கடைசிப் பகுதியான 10 என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதன்படி, காரின் மாதாந்திர கடன் தவணை (EMI), எரிபொருள் செலவு மற்றும் இன்சூரன்ஸ் உட்பட அனைத்துப் பராமரிப்புச் செலவுகளும் உங்களின் மாதாந்திர நிகர வருமானத்தில் 10 சதவீதத்திற்கு மேல் செல்லக் கூடாது.

உதாரணமாக, உங்கள் மாத வருமானம் ரூ.50,000 என்றால், காரிற்கான அனைத்து செலவுகளும் ரூ. 5,000-க்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

நிதி நெருக்கடி

நிதி நெருக்கடியின்றி சொந்தக் கார் வாங்குவதற்கான யோசனைகள்

இந்த 20/4/10 விதியை சரியாகப் பின்பற்றி உங்களால் கார் வாங்க முடிகிறது என்றால் மட்டுமே, அது உங்கள் நிதி நிலைக்குப் பாதுகாப்பான முடிவாகும்.

ஒருவேளை இந்த நிதி விதிக்குள் உங்கள் பட்ஜெட் வரவில்லை என்றால், கூடுதல் முன்பணம் சேர்க்கும் வரை கார் வாங்குவதைத் தள்ளிப்போடலாம் அல்லது பயன்படுத்தப்பட்ட நல்ல செகண்ட் ஹேண்ட் காரைத் தேர்வு செய்யலாம்.

இதன் மூலம் தேவையற்ற கடனில் மாட்டுவதைத் தவிர்த்து நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

ADVERTISEMENT