Page Loader
இந்த ஆண்டு முதல் வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்
வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்

இந்த ஆண்டு முதல் வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 04, 2024
05:57 pm

செய்தி முன்னோட்டம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கால்வாய் நகரமான வெனிஸ், சுற்றுலாவாசிகள் அனைவரிடத்திலும் மிகப்பிரபலம். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், நகரத்தில் கூடுவதுண்டு. எனினும் இந்த கோடை முதல், கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில், வெனிஸ் நகரத்தில் புதிய திட்டத்தை அமல்படுத்த அந்நாட்டின் அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, குழு சுற்றுப்பயணங்களில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம், மாநகர சபையின் ஒப்புதலுக்குப் பிறகு, ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

card 2

ஒரு குழுவில் 25 பேருக்கு மேல் அனுமதி இல்லை 

வெனிஸின் வரலாற்று மையம், முரானோ, புரானோ மற்றும் டோர்செல்லோ தீவுகள் உட்பட சில முக்கியமான இடங்களுக்கு, குழுவாக பயணிக்கும் போது, 25 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதையே விளக்கும் ஒரு அறிக்கையில், நகரின் சுற்றுலா கவுன்சிலர் சிமோன் வென்டுரினி, நகரவாசிகள் மற்றும் பார்வையாளர்களிடையே சமநிலையை உருவாக்க இது எவ்வாறு உதவும் என்பதை விரிவுபடுத்தினார். "இது வெனிஸில் சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் சிறப்பாக நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்ட தலையீடுகளின் பரந்த கட்டமைப்பின் ஒரு பகுதியாகும், இதன் மூலம் நகரத்தில் வசிப்பவர்கள், குடியிருப்பாளர்கள் அல்லது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது தேவைகளுக்கு இடையே அதிக சமநிலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. நகரத்தைப் பார்வையிட [வாருங்கள்]," என்று அவர் மேலும் கூறினார்.