ஏலியன் விண்கலங்கள் குறித்த தகவல்களை மறைக்கிறது அமெரிக்கா - டேவிட் ருஷ்
ஏலியன் என்னும் வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலன்களை குறித்த பல தகவல்களை ரகசியமாக அமெரிக்கா வைத்திருப்பதாக முன்னாள் உளவுத்துறை தலைவர் டேவிட் ருஷ் அண்மையில் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, 1930ம் ஆண்டு முதலே அமெரிக்கா ஏலியன்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளார். மேலும், அவ்வாறு கண்காணிக்கப்பட்ட ஏலியன்கள் குறித்த பல தகவல்களை அமெரிக்கா சேகரித்து வைத்துள்ளது என்றும், ஆனால் அந்த தகவல்களை வெளியே சொல்லாமல் ரகசியம் காத்து வருவதாகவும் டேவிட் ருஷ் கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது. மிக பகிரங்கமாக டேவிட் ருஷ் இந்த தகவலை தெரிவித்துள்ள நிலையில், அவரின் வாக்குமூலம் உண்மையல்ல என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.