புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை
செய்தி முன்னோட்டம்
பெஞ்சமின் கிரஹம் என்பவர் அமெரிக்க நாட்டினை சேர்ந்த பொறியியல் நிபுணராவார்.
இவர் நிறுவனங்கள் குறித்த முதலீடுகளை விரிவாக மேற்கொள்பவர்.
வணிக உலகின் நிகழ் வெற்றிகளில் கவனம் செலுத்துபவராவார்.
இவர் குறித்த சித்தாந்தங்கள் சங்கர்ஷ் சந்தாவுக்கு முதலீடுகள் செய்வதில் ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தனது சகோதரியின் டிமேட் கணக்கு மூலம் முதலீடு செய்ய துவங்கி, வெளிநாடு மற்றும் உள்நாடு நிறுவனங்களின் நிதி நிலவரங்கள் குறித்து அறிந்து கொண்டுள்ளார்.
பின்னர் அவர் தனது கல்வி உதவித்தொகையையும் முதலீடு சார்ந்து பயன்படுத்தி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவ்வாறாக முதலீடு குறித்த அறிவினை பேற்றை சங்கர்ஷ் சந்தா தனது சவார்ட் என்னும் வெல்த் மேனேஜ்மெண்ட் செயலி மூலம் முதலீட்டாளர்கள் சரியான முதலீட்டினை மேற்கொள்ள உதவி வருகிறார்.
முதலீடு செய்ய விரும்புவோருக்கு வாய்ப்பு
தனது முதலீடுகளில் 8 லட்ச மதிப்பிலான பங்குகளை விற்று நிறுவனம் தொடங்கினார்
23வயதாகும் சங்கர்ஷ் சந்தா பெஞ்சமின் கிரஹமின் முதலீடு சார்ந்த கட்டுரைகளை வாசித்து வந்ததால் அதன் மூல கிடைத்த உத்வேகம் காரணமாக பங்குசந்தை சார்ந்து அவர் ஈர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சங்கர்ஷ் சந்தா கூறுகையில், தான் செய்த முதலீடுகள் பெருமளவில் பெருகியது என்று கூறியுள்ளார்.
மேலும், 2 ஆண்டுகால இடைவெளியில் சுமார் 1.5 லட்சம் முதலீடு செய்ததாகவும், தனது பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 13 லட்சமாக மாறியது என்றும் கூறியுள்ளார்.
முறையான கட்டுப்பாடு கொண்ட முதலீட்டின் சக்தியை மக்களிடம் கொண்டு செல்ல நினைத்த இவர், தனது முதலீடுகளில் 8லட்ச மதிப்புள்ள பங்குகளை விற்று 2017ம்ஆண்டு தனது நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
இதன் மூலம் முதலீடுசெய்ய நினைப்பவர்களுக்கு அவர் வாய்ப்பளித்து வருகிறார்.