Page Loader
மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்ற வளர்ப்பு நாய்க்கும் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்!
மாற்றுத்திறனாளி மாணவி

மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்ற வளர்ப்பு நாய்க்கும் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்!

எழுதியவர் Arul Jothe
May 30, 2023
03:04 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பல பட்டப்பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவியான கிரேஸ் மரியானி என்பவர் இளங்கலை அறிவியல் படிப்பை பயின்று வந்துள்ளார். தினம் வகுப்புக்கு செல்வதற்கு ஜஸ்டின் என்ற தனது வீட்டின் வளர்ப்பு நாயையும் துணையாக அழைத்து செல்வது வழக்கம். கிரேசுடன் பயிலும் அனைத்து வகுப்புகளிலும் ஜஸ்டினும் கலந்து கொள்ளும். எனவே அந்த நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டி பல்கலைக்கழகம் டிப்ளமோ பட்ட சான்றிதழை வழங்க முடிவு செய்தது. அந்த சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி இருக்கும் காட்சிகள் மற்றும் புகை படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post