வாட்ஸ்அப்பில் இதய எமோஜி அனுப்பினால் ஐந்தாண்டு சிறை, 60 லட்சம் ரூபாய் அபராதம்
நமக்கு விருப்பமானவர்களுடன் நமது அன்பைப் பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப்பில் அவ்வப்போது நாம் சிவப்பு நிற இதய எமோஜியைப் பயன்படுத்துவோம். ஆனால், அதுவே ஒரு குற்றமாகக் கருதப்பட்டு நாம் சிறை செல்ல நேர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு சட்டம் தான் குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் அமலில் இருக்கிறது. அந்நாடுகளில் வாட்ஸ்அப்பில் பெண்களுக்கு சிவப்பு நிற இதய எமோஜியை அனுப்புவது தொல்லை கொடுப்பதாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இப்படி சிவப்பு நிற எமோஜி அனுப்பி தொல்லை தருவது கண்டறியப்பட்டால் அல்லது புகாரளிக்கப்பட்டால், சிறைத்தண்டை, அபராதம் அல்லது இரண்டுமே கூட விதிக்கப்படலாம்.
என்ன தண்டனை விதிக்கப்படும்?
குவைத்தில் மேற்கூறிய வகையில் சிவப்பு நிற எமோஜி அனுப்புவது குறித்து புகாரளிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். சவுதி அரேபியாவில் இதுபோன்ற எமோஜி அனுப்புவது குறித்து புகாரளிக்கப்படும் பட்சத்தில், முதல் முறை என்றால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இந்திய மதிப்பில் ரூ.21 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து அதே தவறை மீண்டும் செய்வது கண்டறியப்பட்டால், ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.65 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டியிருக்குமாம். எனவே, குவைத் மற்றும் சவதி அரேபியாவில் இருந்தால் சிவப்பு நிற எமோஜியைப் பயன்படுத்தாதீங்க மக்களே.