LGBT மக்களுக்கு, தேவாலயத்தில் அனுமதி உண்டு, ஆனால் விதிகளுக்கு உட்பட்டது : போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரான போப் பிரான்சிஸ், நேற்று வாடிகன் தலைநகரத்தில் நடைபெற்ற, உலக இளைஞர் தின கத்தோலிக்க திருவிழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். அவர் கடந்த சில மாதங்களாக போர்ச்சுகல் நகரில், குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிகிச்சை முடிந்த பின்னர், அவர் தற்போது தான் வாடிகன் நகர பொதுவெளியில் கலந்து கொள்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போப் ஆண்டவர், கத்தோலிக்க திருச்சபை ஓரினச்சேர்க்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் திறந்திருக்கும் என்றும், தனிப்பட்ட ஆன்மீக பாதையில் ஆனால் அதன் விதிகளின் கட்டமைப்பிற்குள் அவர்களுடன் செல்ல வேண்டிய கடமை உள்ளது என்றும் குறிப்பிட்டார். "திருசபையின் சட்டத்தின் படி, அவர்கள் (சில) சடங்குகளில் பங்கேற்க முடியாது" என அவர் மேலும் தெரிவித்தார்.