
விதவிதமாக போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்!
செய்தி முன்னோட்டம்
ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் போதை பொருட்களைக் கடத்தி சென்ற ஒரு பாகிஸ்தான் கப்பல் நேற்று குஜராத் கடல் பகுதியில் பிடிபட்டது.
இவர்களிடம் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் உட்பட பல்வேறு வெடி மருந்துகளும் ஆயுதங்களும் கைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது பாகிஸ்தான் 'ட்ரோன்' ஊடுருவல் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த ஆளில்லா விமானங்களை வைத்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் , போதைப் பொருட்கள் போன்றவை கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்திய எல்லையில் இருக்கும் கிராமங்களுக்கு இது போன்ற பொருட்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சப்ளை செய்து வருவதாகவும் அதற்காகவே அவர்கள் இந்த ட்ரோன்களைப் பயன்படுத்துவதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ட்ரோன்
அத்துமீறும் ட்ரோன்கள்!
2021ஆம் ஆண்டில் 104 பாகிஸ்தான் ட்ரோன்கள் மட்டுமே அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தது. ஆனால், இந்த வருடம் 311க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளன.
இது கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாகும்.
இப்படி அத்துமீறி நுழைந்த ட்ரோன்கள் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினரின் தரவுகளின் படி, 2022ஆம் ஆண்டு 492 யுஏவி மற்றும் 311 ட்ரோன்கள் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது.
யுஏவிகள் பிடிபட்ட மாநிலங்கள்:
பஞ்சாப்-369
ஜம்மு-75
ராஜஸ்தான்-40
குஜராத்-8
ட்ரோன்கள் பிடிபட்ட ஊர்கள்:
பஞ்சாப்-164,
குர்தாஸ்பூர் -96
ஃபெரோஸ்பூர்-84
அபோஹர்-25
இதனையடுத்து, பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களிலும் 3,323 கி.மீ தூரத்திற்கு எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.