நார்வே நாட்டினை சேர்ந்த ஜான் ஃபோர்ஸுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
செய்தி முன்னோட்டம்
ஸ்வீடன் நாட்டினை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நோபல் பரிசானது மருத்துவம், வேதியியல், இலக்கியம், இயற்பியல், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட 6 துறைகளில் சாதனைப்படைத்தோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாக மருத்துவம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட 3 துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று(அக்.,5)இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே நாட்டின் எழுத்தாளர் ஜான் ஃபோர்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் எழுதிய புதிய நாடகம் மற்றும் உரைநடைக்காக, நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஓர் தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.8.32கோடி உள்ளிட்டவைகளை கொண்டதாகும்.
ட்விட்டர் அஞ்சல்
நோபல் பரிசு
#BREAKING || நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு, 2023 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான
— Thanthi TV (@ThanthiTV) October 5, 2023
நோபல் பரிசு அறிவிப்பு#johnfosse #nobelprize pic.twitter.com/dgd8cPHQgg