
சிரியா நிலநடுக்கம்: தொப்புள் கொடியோடு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை
செய்தி முன்னோட்டம்
சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகி இருக்கிறது.
தரைமட்டமான அந்த இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் போது ஒருவருக்கு குழந்தை பிறந்ததாக ஒரு செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.
இடிந்து விழுந்த 5 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் சிக்கி இருக்கும் போது ஒரு பெண் அந்த குழந்தையைப் பெற்று கொண்டதாக உள்ளூர்வாசிகள் உறுதி செய்துள்ளனர்.
சிரியாவில் இடிபாடுகளில் இருந்து மீட்க்கப்பட்ட போது இந்த குழந்தை தொப்புள் கொடியுடன் இணைக்கப்பட்டிருந்தது.
குழந்தையின் முதுகில் காயமடைந்திருந்து. உடல் வெப்பமும் 35°C வரை குறைந்திருந்தது. அதன்பின், குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து குழந்தை தற்போது நலமாக உள்ளது.
குழந்தையின் பெற்றோரும் 4 உடன்பிறப்புகளும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
குழந்தையை மீட்கும் மீட்பு பணியாளர்கள்
🇸🇾 A newborn baby is rescued in Aleppo, Syria. At the time of birth, the mother was under the rubble. She reportedly died after giving birth. pic.twitter.com/7ky2VVDP0J
— Mike (@Doranimated) February 7, 2023