
ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது!
செய்தி முன்னோட்டம்
ஆஸ்கர் விருது பெற்ற பிரபலமான நடிகை தாரனே அலிதூஸ்தி (Taraneh Alidoosti) ஹிஜாப் அணியாததற்காக ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு இவர் நடித்து வெளியாகிய 'தி சேல்ஸ்மேன்' என்னும் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றது.
ஈரானில் 9 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம், ஈரான் நாட்டில் மாஷா அமினி(22) என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் போலீஸாரின் தாக்குதலால் காவலில் இருக்கும் போதே படுகாயம் அடைந்து இறந்தார்.
இந்த சமத்துவம் அந்த நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
19 Dec 2022
சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்த நடிகை!
இதனையடுத்து, இரண்டு மாதங்களாக தொடர்ந்து ஹிஜாப்பிற்கு எதிராக அங்கு பெரும் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது.
இதுவரை இதில் போராடியவர்கள் 2 பேரை ஈரான் அரசு பொது மக்கள் மத்தியில் தூக்கிலிட்டுள்ளது.
ஈரான் அரசின் இந்த போக்கைக் கண்டித்த நடிகை தாரனே அலிதூஸ்தி சமூக வலைத்தளத்தில் ஹிஜாப் அணியாத ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவரைக் கைது செய்த ஈரான் அரசு, அவருடைய சமூக வலைதள கணக்கையும் முடங்கியுள்ளது.
தவறான செய்திகளைப் பரப்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதால் அவரைக் கைது செய்திருப்பதாக இதற்கு ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது.