ஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு
இந்திய மாணவி ஜாஹ்னவி கந்துலா மீது காரை விட்டு ஏற்றிய சியாட்டில் காவல்துறை அதிகாரிக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது என்ற கிங் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா கோரியுள்ளது. இதுகுறித்து சியாட்டிலில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கந்துலாவின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், நீதியை நிலைநிறுத்த தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கி வருவதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது. "உரிய தீர்வுக்காக சியாட்டில் காவல்துறை உள்ளிட்ட உள்ளூர் அதிகாரிகளிடம் நாங்கள் பேசியுள்ளோம். இந்த வழக்கு தற்போது சியாட்டில் நகர வழக்கறிஞர் அலுவலகத்திற்கு மறுஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது" என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
காவல்துறை அதிகாரியின் கவன குறைவால் இந்திய மனைவி பலி
"சியாட்டில் காவல்துறையின் நிர்வாக விசாரணை முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்க போகிறோம். மேலும் வழக்கின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்போம்" என்று அது மேலும் கூறியுள்ளது. ஜனவரி 23, 2023 அன்று டேவ் என்ற காவல்துறை அதிகாரி ஓட்டிச் சென்ற வாகனம், ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த 3 வயது மாணவி கந்துலா மீது மோதியது. சம்பவத்தின் போது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் அந்த அதிகாரி வாகனம் ஓட்டி கொண்டிருந்தார் என்பதும், சம்பவத்தின் போது அவர் தொலைபேசியில் பேசி கொண்டிருந்தார் என்பதும் அதன் பிறகு தெரியவந்தது. இந்த விபத்தினால் ஆந்திராவை பூர்விகமாக கொண்ட மாணவி ஜாஹ்னவி கந்துலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.