Page Loader
மாபெரும் சூப்பர்நோவாக்களின் படங்களை பகிர்ந்த நாசா
2,100 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிக்னஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள வெயில் நெபுலா

மாபெரும் சூப்பர்நோவாக்களின் படங்களை பகிர்ந்த நாசா

எழுதியவர் Sindhuja SM
Mar 02, 2023
06:24 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர்நோவா என்று அழைக்கப்படும் ஆச்சர்யமூட்டும் நிகழ்வின் புகைப்படங்களை நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ளது. சூப்பர்நோவா என்பது ஒரு நட்சத்திரம் வெடித்து சிதறும் நிகழ்வாகும். நாசா வெளியிட்டுள்ள ட்வீட் படி, ஒரு சூப்பர்நோவா நடக்கும் போது ஒரு நட்சத்திரத்திம் வினாடிக்கு 25,000 மைல் வேகத்தில் வெடித்து சிதறும். சூப்பர்நோவாக்கள் பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆற்றல்மிக்க நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்படி ஒரு மிகப்பெரும் சூப்பர்நோவா நடக்கையில் எடுக்கப்பட்ட படங்களையும் நாசா பகிர்ந்துள்ளது. நாசா பகிர்ந்துள்ள முதல் படம் வெயில் நெபுலாவைக் காட்டுகிறது. இது பூமியிலிருந்து 2,100 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிக்னஸ் விண்மீன் தொகுப்பில் உள்ளது. இரண்டாவது படம் வண்ணமயமான சூப்பர்நோவாவின் எச்சமான டிஇஎம் எல் 190 இன் துண்டுகளைக் காட்டுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

நாசா பகிர்ந்த ஆச்சர்யமூட்டும் படங்கள்