கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்
கனடாவில் உள்ள பிராம்ப்டனில் மிகவும் பிரசித்தி பெற்ற கெளரி சங்கர் மந்திர் என்னும் ஓர் பிரபலமான இந்து கோயில் உள்ளது. இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக கருதப்படும் இந்த கோயில் மர்மக்கும்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலால் அங்கு பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. இந்த செயலை சீக்கிய பிரிவினைவாதிகள் என்று கருதப்படும் கும்பல் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்த செயலிற்கு கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன் ஆச்சார்யா, பிரம்டனில் உள்ள கெளரி சங்கர் மந்திர் சிதைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கனடாவில் அமைந்துள்ள இந்து கோயில்களில் இது போன்ற தாக்குதல்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக அறிக்கை-இந்திய தூதரகம்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், கெளரிசங்கர் மந்திர் கோயிலை இழிவுபடுத்தியது கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், வெறுக்கத்தக்க காழ்புணர்ச்சியால் செய்யப்பட்ட இந்த செயல் இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தாங்கள் கனடா அதிகாரிகளிடம் தங்களின் கவலைகளை தெரிவித்துள்ளதாகவும் இந்திய தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர். பிராம்ப்டனில் உள்ள இந்து கோயிலை இழிவுபடுத்தியது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது.