LOADING...
"உதவி விரைவில் வரும்!": ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப்
ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப்

"உதவி விரைவில் வரும்!": ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 14, 2026
09:08 am

செய்தி முன்னோட்டம்

ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஈரானிய அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகளுக்கு மத்தியில், போராட்டக்காரர்களுக்கு "உதவி விரைவில் வரும்" என்று அவர் கூறியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், ஈரானிய தேசப்பற்றாளர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றும், அரசு நிறுவனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். "உதவி வரும்" என்று அவர் குறிப்பிட்டது எத்தகைய நடவடிக்கையைக் குறிக்கிறது என்ற கேள்விக்கு, "விரைவில் அதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்" என்று மர்மமான முறையில் பதிலளித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கண்டிப்பு

ஈரான் அரசை கண்டித்த அமெரிக்கா; ராணுவ தலையீடு நடத்த திட்டம்?

போராட்டக்காரர்கள் மீதான வன்முறை நிறுத்தப்படும் வரை ஈரான் அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களில் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும், அமெரிக்காவின் நேரடி ராணுவத் தலையீடு ஈரானிய தேசியவாதத்தை வலுப்படுத்தும் என அந்நாட்டின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement