சியாட்டில் நகரில் நடந்த துப்பாக்கி சூடு - 5 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா வாஷிங்டன் பகுதியில் அமைந்துள்ளது சியாட்டில் நகரம்.
இங்கு ரெய்னர் பீச் பகுதியில் 'சேப்வே' என்னும் கடை ஒன்றில் சியாட்டில் சமூக பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் இலவச உணவு உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் பட்சத்தில் மக்கள் கூட்டம் இங்கு கூடுவது வழக்கம்.
அதன்படி நேற்று(ஜூலை.,28) நடந்த நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்தியவாறு வந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
இதில் 4 பேர் ஆண்கள் என்றும், ஒருவர் பெண் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
துப்பாக்கி சூடு
காவல்துறை இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை
மேலும் இதில் பலத்த காயமுற்ற 2 பேர் ஹார்பர்வியூ மருத்துவ மையத்தில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சியாட்டில் மாநகர காவல்துறை தலைவரான அட்ரியன் டயஸ், கிங் டோனட் கடைக்கு அருகிலுள்ள கடையின் வாகன நிறுத்தத்தில் தான் இந்த துப்பாக்கி சூடு துவங்கியது என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது காவல்துறை இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய துவங்கியுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதனிடையே, 'பல தவறான மனிதர்கள் கைவசம் துப்பாக்கிகள் உள்ளது' என்று சியாட்டில் நகரத்தின் மேயரான ப்ரூஸ் ஹேரல் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த பொழுது கூறியுள்ளார்.