LOADING...
"உங்க பிரண்ட்ஷிப் எனக்கு தேவையில்லை!" அமெரிக்க அதிபர் டிரம்பை வெளுத்து வாங்கிய இத்தாலி பிரதமர் மெலோனி
அமெரிக்க அதிபர் டிரம்பை வெளுத்து வாங்கிய இத்தாலி பிரதமர் மெலோனி

"உங்க பிரண்ட்ஷிப் எனக்கு தேவையில்லை!" அமெரிக்க அதிபர் டிரம்பை வெளுத்து வாங்கிய இத்தாலி பிரதமர் மெலோனி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2026
08:25 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையேயான தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான மோதல் தற்போது ஒரு மிகப்பெரிய சர்வதேச ராஜதந்திர போராக வெடித்துள்ளது. பிரான்சில் சமீபத்தில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது, பிரதமர் மெலோனி தனனுடன் புகைப்படம் எடுக்கப் பலமுறை கெஞ்சியதாக டிரம்ப் கூறிய கருத்துக்கு, இத்தாலி பிரதமர் தற்போது மிகக் கடுமையான வார்த்தைகளால் பகிரங்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார். டிரம்பின் இந்தத் தொடர் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அறிவற்றவை என்று அவர் சாடியுள்ளார்.

சர்ச்சை கருத்து

ட்ரூத் சோஷியலில் டிரம்ப் பதிவிட்ட சர்ச்சை கருத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில், "பிரான்சில் நடந்த ஜி7 கூட்டத்தின் போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி என்னுடன் புகைப்படம் எடுக்குமாறு மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். இத்தாலியில் அவரது தற்போதைய மக்கள் செல்வாக்கு மிகவும் மோசமாக சரிவடைந்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி ஆதரவு அளிக்க மறுத்ததே அவரது இந்த வீழ்ச்சிக்குக் காரணம்." என்று மிகக் காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

விமான ஓடுதளங்கள்

விமான ஓடுதளங்களைப் பயன்படுத்த மறுப்பு என டிரம்ப் குற்றச்சாட்டு

அதுமட்டுமின்றி, ஈரானுக்கு எதிரான போரின் போது அமெரிக்க ராணுவ விமானங்கள் இத்தாலியின் விமான ஓடுதளங்கள் அல்லது ரன்வேக்களைப் பயன்படுத்த இத்தாலி அரசு அனுமதிக்கவில்லை என்றும், இது தங்களுக்குப் பெரும் தார்மீக மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நெருக்கடியை ஏற்படுத்தியதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். நேட்டோ அமைப்பின் கீழ் இத்தாலியின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழிக்கும் நிலையில், இத்தாலி இவ்வாறு துரோகம் இழைத்துள்ளதாக டிரம்ப் சாடியிருந்தார்.

Advertisement

மெலோனி பதிலடி

"உங்களுடன் நட்பாக இருந்தது என் புகழுக்கு உதவவில்லை" - மெலோனி சாடல்

டிரம்பின் இந்தத் தொடர் தாக்குதல்களுக்குத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக ஆக்ரோஷமாகப் பதிலளித்த மெலோனி, "அதிபர் டிரம்ப் அவர்களே, உங்களது இந்தத் தூண்டப்படாத தொடர் தாக்குதல்கள் முற்றிலும் அர்த்தமற்றவை. என்னுடைய மக்கள் செல்வாக்கைப் பற்றிப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்களுடன் நட்பாக இருந்தது நிச்சயமாக எனது அரசியல் புகழுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. எனது செல்வாக்கு என்பது இத்தாலியின் தேசிய நலன்களை நான் எவ்வளவு தூரம் பாதுகாக்கிறேன் என்பதைப் பொறுத்தது தான்." என்று நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இறையாண்மை

இத்தாலி என்றும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு

மேலும் அமெரிக்க ராணுவத் தளங்கள் குறித்துப் பேசிய மெலோனி, "இத்தாலியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின் பயன்பாடு என்பது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தங்களின்படி மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது. நான் பிரதமராக இருக்கும் வரை அந்த விதிகளை யாரும் மீற முடியாது. இத்தாலி என்றும் ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு. எல்லாவற்றிற்கும் மேலாக, எனது பிரபலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, உங்களது நாட்டின் செல்வாக்கைப் பெருக்குவதில் கவனம் செலுத்துங்கள்." என்று மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

நட்பு முறிவு

எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய அரசியல் நட்பு முறிவு

சர்வதேச அளவில் வலதுசாரி கொள்கை உடைய டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜார்ஜியா மெலோனி ஆகிய இருவரும் நீண்ட காலமாக நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் பார்க்கப்பட்டனர். டிரம்ப் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்ற போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் கலந்துகொண்ட ஒரே தலைவர் மெலோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு ஈரானிய ராணுவத் தாக்குதலை இத்தாலி கடுமையாக எதிர்த்ததால் இரு நாட்டு உறவுகளிலும் தற்போது கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி தனது திட்டமிடப்பட்ட அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

Advertisement