IS கொள்கையால் தூண்டப்பட்டது பாண்டி கடற்கரை தாக்குதல் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம், ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத கொள்கையால் தூண்டப்பட்ட செயல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று அறிவித்துள்ளார். AFP மற்றும் BBC வெளியிட்ட செய்தி குறிப்பு இதனை உறுதி செய்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் துப்பாக்கிதாரிகளில் ஒருவர் உட்பட மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாகப் பேசிய பிரதமர் அல்பானீஸ், இந்தத் தாக்குதலை 'நுணுக்கமான, திட்டமிட்ட, இரக்கமற்ற' செயல் என்று வர்ணித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
In moments like this, we must come together.
— Anthony Albanese (@AlboMP) December 15, 2025
Australia stands united against hatred and terror. pic.twitter.com/b88z48uLzf
தாக்குதல்
தந்தை-மகன் இணைந்து நடத்திய தாக்குதல்
இந்தத் தாக்குதலை செய்தவர்கள், சஜித் அக்ரம் மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தந்தை சஜித் அக்ரம் சம்பவ இடத்திலேயே காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மகன், நவீத் அக்ரம் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இந்த இரு துப்பாக்கிதாரிகளும் தனித்துச் செயல்பட்டனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களின் காரில் ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவின் கொடி ஒன்று கண்டெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே, இந்தக் கொள்கைத் தொடர்பு உறுதியாகியுள்ளது. துப்பாக்கிதாரிகளில் ஒருவரான நவீத் அக்ரம், முன்னர் சட்ட அமலாக்க அதிகாரிகளின் கவனத்தைப் பெற்றிருந்தார் என்றும் பிரதமர் அல்பானீஸ் தெரிவித்தார். ஆனாலும், அச்சமயத்தில் அவர் ஒரு முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.