பிப்ரவரி 12, 2026இல் பங்களாதேஷ் பொதுத் தேர்தல்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷில் அடுத்த பொதுத் தேர்தல் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அந்நாட்டில் நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் ஆகும். பங்களாதேஷில் கடந்த ஜனவரி 7, 2024 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் சர்ச்சைக்குள்ளான நிலையில், நாடு முழுவதும் ஏற்பட்ட பெரிய அளவிலான மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கம் பதவியிலிருந்து விலகியது. ஷேக் ஹசீனா விலக்கப்பட்ட பிறகு, நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஒரு இடைக்கால அரசாங்கம் ஏற்றது. இந்நிலையில், நாட்டை ஜனநாயக முறைப்படி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் ஒப்படைப்பக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING 🚨| Bangladesh to hold elections on February 12, first poll since Sheikh Hasina's exit
— Hindustan Times (@htTweets) December 11, 2025
👉🏻Tap to read: https://t.co/TrvFkLsF1e pic.twitter.com/ZP3oK51ePh