Page Loader
அமேசான் மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகள் பழமையான நகரம்: முழு விவரம் 

அமேசான் மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகள் பழமையான நகரம்: முழு விவரம் 

எழுதியவர் Sindhuja SM
Jan 15, 2024
10:20 am

செய்தி முன்னோட்டம்

அமேசான் மழைக்காடுகளின் செழிப்பான மரங்களுக்குள் மறைந்திருந்த ஒரு பெரிய நகரம் ஈக்வடார் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உபனோ பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் அந்த பண்டைய நகரத்தில் உள்ள வீடுகள் மற்றும் பிளாசாக்கள் சாலைகளாலும் கால்வாய்களாலும் இணைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி ஒரு எரிமலைக்கு அருகில் அமைந்திருப்பதால் அந்த நகரம் வளமான உள்ளூர் மண்ணை கொண்டுள்ளது. தொலைவுகளை அளவிட ஒளியைப் பயன்படுத்தும் பிரபலமான ரிமோட் சென்சிங் முறையான LiDAR ஐப் பயன்படுத்தி அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரிமோட் சென்சிங் முறை, லேசர் ஸ்கேனிங் அல்லது 3D ஸ்கேனிங் என்றும் அழைக்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டிலேயே உபனோ பள்ளத்தாக்கில் LiDAR சோதனை நடத்தப்பட்டிருந்தாலும், அதன் முடிவுகள் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டன.

டக்லசை

பிற கொலம்பிய நகரங்களை விட இது பழமையான

இந்த நகரம் 3,000 முதல் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமேசானில் கண்டுபிடிக்கப்பட்ட பிற கொலம்பிய நகரங்களை விட இது பழமையானதாகும். இந்த நகரத்தில் 1,000 ஆண்டுகள் வரை மக்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்றும் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. "இது அமேசானிய கலாச்சாரங்களை நாம் பார்க்கும் விதத்தை மாற்றியுள்ளது. பெரும்பாலான மக்கள் அமேசான் கலாச்சாரம் என்றால், அவர்கள் சிறிய குழுக்களாக குடிசைகளில் வாழ்ந்தார்கள், நிர்வாணமாக அலைந்தார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது பண்டைய மக்கள் சிக்கலான நகர்ப்புற சமூகங்களில் வாழ்ந்ததைக் காட்டுகிறது." என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியரான அன்டோயின் டோரிசன் கூறியுள்ளார். 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் 6,000க்கும் மேற்பட்ட உயர்த்தப்பட்ட மண் மேடைகளை இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.