மகளிர் ஐபிஎல் 2023 : இளமை பிளஸ் அனுபவம்! சரியான கலவையுடன் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக்கிற்கான முதல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் இளமை மற்றும் அனுபவ வீராங்கனைகளுடன் சரியான கலவையில் எடுக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் 17 வீராங்கனைகளை தன்னிடமிருந்த ரூ. 12 கோடியை முழுமையாக செலவிட்டு வாங்கியுள்ளது. இந்திய மகளிர் அணியை வழிநடத்தும் ஹர்மன்பிரீத் கவுரை வாங்கியுள்ளதால், அவரே மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியையும் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணி : ஹர்மன்ப்ரீத் கவுர், நாட் ஸ்கிவர்-பிரண்ட், அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகர், யாஸ்திகா பாட்டியா, ஹீதர் கிரஹாம், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், தாரா குஜ்ஜர், சைகா இஷாக், ஹேலி மேத்யூஸ், சோலி ட்ரையோன், ஹுமைரா காசி, ஜே யமனி பாலா, பிரியங்கா பாலா. கலிதா, நீலம் பிஷ்ட்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ள முக்கிய வீரர்கள்
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் நடாலி-ஸ்கிவர் ப்ரண்ட் ரூ.3.2 கோடிக்கு வாங்கப்பட்டார். இதன் மூலம் ஏலத்தில் மிக அதிகபட்ச தொகைக்கு எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீராங்கனையாக நடாலி-ஸ்கிவர் உருவெடுத்தார். ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை ஹர்மன்ப்ரீத்துடன், இந்திய ஆல்ரவுண்டர் பூஜா வஸ்த்ரகர் ரூ.1.9 கோடிக்கும், நியூசிலாந்தின் அமெலியா கெர் ரூ. 1.00 கோடிக்கும் எடுக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டராக யாஸ்திகா பாட்டியாவை ரூ.1.5 கோடி மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது. சுவாரஸ்யமாக, மும்பை இந்தியன்ஸ் ஆடவர் அணிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தலைமை வகிக்கும் நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் மூலம் மகளிர் அணியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தனித்துவத்தை கொண்டுள்ளது.