Page Loader
பாபர் அசாமின் கேப்டன் பதவி பறிப்பா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிபி தலைவர்
பாபர் அசாமின் கேப்டன் பதவி பறிப்பு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிபி தலைவர்

பாபர் அசாமின் கேப்டன் பதவி பறிப்பா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிபி தலைவர்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 14, 2023
01:36 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பாகிஸ்தானின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஷதாப் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டதால், பாபர் அசாமிடமிருந்து பதவி பறிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் (பிசிபி) நஜாம் சேத்தி, "பாபர் அசாமின் கேப்டன் பதவிக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. எந்த ஒரு வடிவிலோ அல்லது மூன்று வடிவங்களிலோ கேப்டன் பதவியில் இருந்து விலக அவரே விரும்பும் வரை தொடர்ந்து நீடிப்பார்." என்று திங்களன்று (மார்ச் 13) செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் வீரர்களை களமிறங்கியுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்வீட்